மேலும் அறிய

திருப்போரூரில் 81.15 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்பு!

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான, 81.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 16.23 ஏக்கர் நிலத்தை கோயில் நிர்வாகம் மீட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக, பல கோடி ரூபாய் மதிப்பு, 2,000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துகளை, சிலர் அபகரிக்க முயல்வதாக வழக்கறிஞர் ஒருவர், கடந்தாண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து கோயில் மற்றும் அறக்கட்டளை நிலங்களை ஆய்வு செய்யும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் அளவீட்டு பணி, முடியும் தருவாயில் உள்ளது.
திருப்போரூரில் 81.15 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்பு!
 
அதேபோல், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், ஒரு மாதமாக வருவாய் துறையினர், கோயில் நிர்வாகத்தினர் அளவீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 29 ம் தேதி இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார், அப்போது கோயில் செயல் அலுவலர் சக்திவேலிடம் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டதா என கேட்டார். அதற்கு அவர் 80 சதவீதம் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும். இன்னும் 40 ஏக்கருக்கு மேல் மீட்கவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் அனைத்து விதமான பணிகளையும் உடனடியாக முடித்துவிட்டு நிலங்களை மீட்கும் மாறு உத்தரவிட்டார் .
திருப்போரூரில் 81.15 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்பு!
 
இதையடுத்து, திருப்போரூர்– நெம்மேலி சாலை, புதிய ஆறுவழிச்சாலை அருகே உள்ள சர்வே எண்கள் 183, 6, 10, 131, 40, 21 ல், உள்ள பல்வேறு சர்வே எண்களை கொண்ட இடங்களை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்துள்ளனர். தற்போது 6 வழி சாலை பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருவதால் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அதிக விலைக்கு விற்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

திருப்போரூரில் 81.15 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்பு!
இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள 16.23 ஏக்கர் விவசாய நிலங்களை கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோயில் பணியாளர்கள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்டனர்.

திருப்போரூரில் 81.15 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்பு!
பின்னர் கோயிலுக்கு சொந்தமான இடம், ஆக்கிரமிப்போர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பு பலகை வைத்தனர். 5 க்கும் மேற்பட்ட சர்வே எண் கொண்ட மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 81.15 கோடி ரூபாய் இருக்கும் என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் அனைத்து விதமான சொத்துக்களையும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கோயில் நிலங்களை மீட்டு எடுப்பதில் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது .
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget