மேலும் அறிய

கொள்ளிடம் ஆற்றில் குளித்த முதியவரை இழுத்து சென்ற முதலை - 10 ஆண்டுகளில் 10 பேர் பலி

’’கொள்ளிடம் ஆற்றி பிடிபடும் முதலைகளை சிதம்பரம் அருகே முதலைப்பண்ணை அமைத்து அதில் விட்டு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை’’

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த ஆற்றில் உள்ள கிளை வாய்க்காலில் இருந்து அவ்வப்போது, முதலைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அந்த முதலைகளை வனத்துறையினர் பிடித்து நீர் தேக்கத்தில் விடுவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட முதலை ஊருக்குள் புகுந்து உள்ளது ஆனால் மக்கள் மற்றும் வனத்துறையினர் பிடித்து மீண்டும் ஆற்றில் விடப்பட்டன.
 
கொள்ளிடம் ஆற்றில் குளித்த முதியவரை இழுத்து சென்ற முதலை -  10 ஆண்டுகளில் 10 பேர் பலி
கோப்புப்படம் 
 
இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பழையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கோபாலகிருஷ்ணன் (65) இந்நிலையில் இவர் நேற்று இரவு 7 மணியளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு சென்று கரையோரம் அவர் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று கோபாலகிருஷ்ணனை ஆற்றில் இழுத்து சென்றுவிட்டது. அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் கோபாலகிருஷ்ணனை முதலை இழுந்து சென்றதை அறிந்து அலறி கூச்சலிட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் குளித்த முதியவரை இழுத்து சென்ற முதலை -  10 ஆண்டுகளில் 10 பேர் பலி
 
பின் சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்க சென்ற கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றுக்கு ஓடிவந்தனர். அப்போது கோபாலகிருஷ்ணளை முதலை இழுத்து சென்ற தகவலை அங்கிருந்தவர்கள் அவர்களிடம் கூறினர். கதறி அழுத அவரது குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொள்ளிடம் ஆற்றில் குளித்த முதியவரை இழுத்து சென்ற முதலை -  10 ஆண்டுகளில் 10 பேர் பலி
 
பின் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி கோபாலகிருஷ்ணனை தேடினர் வெகு நேரம் ஆனது இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. பின் படகில் சென்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களும் இரவு 10.30 வரை தேடினர். அப்போது ஆற்றின் ஒரு மூலையில் முதலை தன் வாயில் எதையோ வைத்து கடித்து கொண்டிருந்தது, பின் வெளிச்சம் அடித்து பார்க்கையில் அது கோபாலகிருஷ்ணனின் சடலம் இதனை கண்டதும் ஊர்மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் முதலை சடலத்தை விடாமல் முரண்டு பிடித்தது. பின்னர் முதலையை அடித்து விரட்டி விட்டு சடலத்தை மீட்டனர். ஆற்றில் குளிக்க சென்ற நபரை முதலை இழுத்து சென்று விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கொள்ளிடம் ஆற்றில் குளித்த முதியவரை இழுத்து சென்ற முதலை -  10 ஆண்டுகளில் 10 பேர் பலி
 
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவர் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது முதலை இழுத்துச்சென்று இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சகோதரர் இருவரையும் முதலை இழுத்து சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பழைய கொள்ளிட ஆறு மற்றும் அதன் உபரி நீர் செல்லும் பகுதிகளில் ஏராளமான முதலைகள் கடித்து கடந்த 10 ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்ததாக அப்பகுதியினர் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர். மேலும் பலர் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் இழந்துள்ளவர், கடந்த சிலை தினங்களுக்கு முன்பு தவர்த்தம்பட்டு, பளங்காடு ஆகிய கிராமங்களில் ஒரே நாளில் இரண்டு பேர் முதலை கடிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இது போல் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் அருகே முதலை பண்னை அமைக்க வேண்டும் கொள்ளிடம் ஆற்றில் பிடிபடும் முதலைகளை அந்த பண்ணையில் விட்டு பாதுகாக்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget