அடைமழை.. துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. ஹாஸ்பிடலில் இருந்து அவசரமாக மாற்றப்பட்ட குழந்தை.! பரபரப்பு!
சென்னை தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது
தமிழகம் மற்றும் சென்னையின் பல பகுதிகளில் கடுமையான மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இந்த நிலையில், சென்னை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில சென்னை தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் மாற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் உட்பட குழந்தையும் பாதுகாப்பான முறையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆம்புலன்சை பின் தொடர்ந்து படகு மூலம் ஆம்புலன்சை பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக சென்னை தேனாம்பேட்டை கிரியப்பா சாலை மற்றும் அதன் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவனையில் வெண்டிலேட்டர் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உடனடியாக வென்டிலேட்டர் வசதிகொண்ட ஆம்புலன்ஸ் மூலம் வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
கடுமையான தண்ணீர் தேங்கியுள்ள சாலையில் வென்டிலேட்டர் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட குழந்தை செல்லும் ஆம்புலன்சை தீயணைப்புத்துறையினர் படகு மூலம் பின் தொடர்ந்து பாதுகாப்பு அளித்தனர். சிகிச்சைக்காக மாற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை உதவிக்காக அப்பகுதி பொதுமக்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் என பல்வேறு தரப்பினருடன் குழந்தை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து டாக்டரும், திமுக எம்.எல்.ஏ.வுமான எழிலன் ட்வீட் செய்துள்ளார்.
Coordination effort
— Ezhilan (@Dr_Ezhilan) November 7, 2021
Shifted three babies in neonatal intensive care from one center to another because of power failure due to floods pic.twitter.com/xwKOd3GcIJ
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து வருகிற நிலையில் மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்பு படை வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்