மேலும் அறிய
Advertisement
Watch Video | மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் 29-ஆம் ஆண்டின் இந்திய நாட்டிய விழா..
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மதிவேந்தன் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ”தமிழ் பண்பாடு வெளிபடுத்தும் வகையில் இந்த விருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் உலக புகழ்பெற்றவை இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் அதிகம் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளது தமிழகம்தான். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது இந்த ஆண்டும் பல்வேறு அரசின் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக விழா நடைபெற்று வருகின்றது மாமல்லபுரம் வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைபெற்று வருகின்றது. 2009 ஆண்டு கலைஞர் இந்திய நாட்டிய விழா என்று பெயர் மாற்றினார் . இதற்க்கு முன்பு மாமல்லபுரம் நாட்டிய விழாவாக நடைபெற்றது. மாமல்லபுரம் பெருத்தவரை செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்து வருகின்றது. இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு இந்த இந்திய நாட்டிய விழா மிக சிறப்பாக நடைபெறும்” என பேசினார் .
இந்த விழாவில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் சந்தீப் நல்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், அரசு முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா பண்பாடு அறநிலையத்துறை தலைவர் சந்திரமோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலாஜி, வரலட்சுமி, அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய நாட்டிய விழாவில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் அமைச்சர்கள் கண்டுகளித்தனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் 29 ஆம் ஆண்டின் இந்திய நாட்டிய விழா கோலாகலமாக இன்று துவங்கியது pic.twitter.com/ozWYBY83Rx
— Kishore Ravi (@Kishoreamutha) December 23, 2021
ஒரு மாதம் நடக்கும் இவ்விழாவில் இன்று முதல் பரதம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி உள்ளிட்ட தமிழர்களின் பாரம் பரிய நாட்டியங்கள், கரகம், காவடி, ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள், விழாவில் இடம்பெறும் முன்னதாக இசை மங்கலத்துடன் விழா துவக்கியது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அடுத்த மாதம் 23-ஆம் தேதிவரை இந்த விழா நடைபெறவுள்ளது'
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion