Teynampet Fire Accident: நள்ளிரவில் பரபரப்பு... பயங்கர வெடி சட்டத்துடன் தீப்பிடித்த டிரான்ஸ்பார்மர்... அலறியடித்து எழுந்த பகுதிவாசிகள்
தேனாம்பேட்டையில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று அதிக வெடி சட்டத்துடன் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பிபி கோயில் தெரு அருகே உள்ள பாபு தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் அதிக சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிரான்ஸ்பார்மர் அருகில் மாடு கட்டும் இடம் உள்ளதால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ மாடு கட்டும் இடத்திற்கு பரவியது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து, இந்த தீ விபத்து பற்றி அறிந்ததும் ஐந்து நிமிடங்களில் தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

