TN Rain: சென்னையில் இரவு வெளுத்த மழை.! தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா.?
Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

சென்னை மாவட்டத்தில் இரவு - அதிகாலை பொழுதில், மழையானது திடீரென பெய்தது. இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து, வானிலை மையம் என்ன தெரிவித்துள்ளது என பார்ப்போம்.
தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றைய வானிலை:
தமிழகத்தில் ஒருசில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28:12-2024 மற்றும் 29 -12 -2024:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
30-12-2024 ல் 31-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01:01:2025:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read; New Year Rain: புத்தாண்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன?
02-01-2025.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















