Watch Video : அலையில் சிக்கி மயங்கிய சிறுவன்..! முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய தமிழக டி.ஜி.பி..!
மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழக டி.ஜி.பி.யாக பொறுப்பு வகிப்பவர் சைலேந்திர பாபு. இவர் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபயிற்சி சென்றார். அப்போது, கடல் அலையில் சிக்கிய மூழ்கிய சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டனர். அப்போது, அதைக்கண்ட சைலேந்திர பாபு உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி செய்தார். பின்னர், அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
உயிருக்கு போராடிய சிறுவனை அங்கிருந்தவர்கள் நீரில் இருந்து காப்பாற்றினர். ஆனாலும், சிறுவன் மயக்க நிலையிலே இருந்தான். சிறுவன் மயங்கிய நிலையில் இருந்ததால் சிறுவனின் பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினர் பதற்றம் அடைந்தனர். அப்போது, அந்த வழியே நடைபயிற்சிக்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அந்த சிறுவனின் நெஞ்சை அழுத்தி முதலுதவி செய்தார்.
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் - தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தமிழ்நாடு டிஜிபி#ChennaiMarinaBeach #DGPSylendrababuIPS #ChildRescue #TimelyHelp #TNPolice pic.twitter.com/wjrk4KTvZK
— Tamil Nadu Police (@tnpoliceoffl) August 14, 2022
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் - தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தமிழ்நாடு டிஜிபி#ChennaiMarinaBeach #DGPSylendrababuIPS #ChildRescue #TimelyHelp #TNPolice pic.twitter.com/wjrk4KTvZK
— Tamil Nadu Police (@tnpoliceoffl) August 14, 2022
சிறிது நேரத்தில் மயக்கத்தில் இருந்து சிறுவன் மீண்டான். பின்னர், அந்த சிறுவனுக்கு தண்ணீர் தெளித்து அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். மேலும், உடனடியாக ஆம்புலன்சை உதவிக்கு அழைக்குமாறு டி.ஜி.பி. அருகில் இருந்த போலீசாரிடம் கூறினார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்சில் சிறுவனை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிய சிறுவனுக்கு முதலுதவி செய்த டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிற்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்