மேலும் அறிய
"மூன்று உயிரிழப்புகளை பார்த்தேன்" : எவரெஸ்ட் ஏரி சாதித்த ராஜசேகரனின் முதல் பேட்டி..
உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த இளைஞருக்கு உற்சாக வரவேற்பு
![Tamil who reached the Everest peak Kovalam youth who conquered the snow and cold Who is this Rajasekhar](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/937d319e61eda6967fe43d394603d20f1684773407432191_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உற்சாக வரவேற்பு
சென்னை கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை, என்பவர் அலைச் சறுக்குப் போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். அலைச்சறுக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். மலையேற்றத்தின் மீது ஆர்வம்கொண்ட இவருக்கு, எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. இதற்காக கடந்த ஒராண்டாக மலையேற்றப் பயற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது கடுமையான பனி, குளிரைத் தாங்கவேண்டும். இதற்காக மணாலி, சோலாங் உள்ளிட்ட குளிர் நிறைந்த மலைகளில் மலையேற்றம் செய்து பயிற்சி எடுத்துள்ளார். கடுமையான பயற்சிகளுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்குத் தயாரான ராஜசேகர், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை மே 19 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்துள்ளார். ஒரு மாதம் கடுமையான குளிர், சறுக்கல்கள் என பல தடைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, பேஸ்கேம்ப்புக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/9a76f1f362fc8286b7f2c50a0842d3011684773220611191_original.jpg)
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த குட்டி என்கிற ராஜசேகரனுக்கு பொதுமக்கள் மற்றும் கோவளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் , கோவளம் பகுதியை சேர்ந்த மக்கள் வரவேற்பு அளித்தனர். ராஜசேகரனை அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்கள் ஆரத் தழுவி கட்டியணைத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த குட்டி என்கிற ராஜசேகரன் பச்சை கூறுகையில், ”நான் கோவளம் பகுதியை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவன் .ஆரம்பத்தில் நான் அலைச்சறுக்கு விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தேன். உலகில் உயரமான மலை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்திருப்பது பெருமையாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் தமிழக மக்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. எனது கோவளம் பகுதியை சேர்ந்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடலில் நான் அலைச்சறுக்குபோட்டியில் விளையாடிய போது பல பரிசுகளை வென்ற பொழுது மீனவ சமுதாயத்தை சார்ந்த நீங்கள் கடலை பற்றி தெரிந்திருப்பீர்கள் அதில் வெற்றிபெறுவது எளிது” என கூறினார்கள்.
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/22da3af1dd00360d21ae10ff8417af081684773327323191_original.jpg)
எனவே, எளிது என்று கூறுகிறார்களே எனவே நாம் கடினமானது என நினைக்கக்கூடியதை சாதித்து காட்டுவோம் என்ன என்ற எண்ணம் எனக்கு வந்தது. எனவே, மலை ஏற முடிவு எடுத்தேன். சிறிய மலையில் துவங்கி படிப்படியாக ஏற துவங்கினேன். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு பல்வேறு மலைகளை படிப்படியாக ஏறினேன். இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள மலைகளை ஏறினேன் அதேபோல் நேபாளத்திலும் மலைகளை ஏறி பயிற்சி எடுத்தேன். கடந்த மாதம் ஏப்ரல் 13 ஆம் தேதி இருந்து எவரெஸ்ட் சிகரம் , அடைந்து மேலும் பல்வேறு இடங்களில் கேம்ப் அமைத்தேன் . மேலும் செல்ல செல்ல ஆக்சிஜன் குறைந்ததால் ஆக்சிஜன் மாஸ் அணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. முதலில் குடும்பத்தினரிடம் இந்த முடிவை கூறிய பொழுது சற்று அச்சமடைந்தனர் பின்பு அவர்கள் முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். நான் எவரெஸ்ட் மேலே ஏற சென்ற பொழுது மூன்று உயிரிழப்புகளை வழியில் பார்த்தேன். ஆனால் அதை மீறி சாதித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion