"மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு” என்ன ஆச்சு அவருக்கு..?
”மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டிருந்தப்போது அவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டதாக கூறப்படுகிறது”
![Tamil Nadu Minister K.N. Nehru Hospitalized in Chennai Apollo Due to Fever and Fatigue](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/26/0ad19c38761d33d68ff3633512754bf21732590622130108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் கே.என்.நேரு, சிகிச்சை முடிந்து தன்னுடைய வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றது குறித்து அமைச்சர் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதே மருத்துவமனையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸூம் நெஞ்சு வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)