மேலும் அறிய
IPS Officer Transfer: இரண்டு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான அமல்ராஜ் மற்றும் பிரதீப் வி பிலிப் இருவரையும் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐபி.எஸ். அதிகாரிகள் அமல்ராஜ் மற்றும் பிரதீப் வி பிலிப்
தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பொறுப்பு வகிப்பவர் டி.ஜி.பி. முனைவர் பிரதீப் வி பிலிப். அவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை கல்லூரியின் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். ஆபரேஷன்ஸ் பிரிவின் ஏ.டி.ஜி.பி. முனைவர் அமல்ராஜ் ஐ.பி.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















