MK Stalin : மகாத்மா காந்தி நினைவுதினம்; தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர்,முதலமைச்சர் மரியாதை!
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
காந்தியும் உலக அமைதியும் புகைப்பட கண்காட்சி :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஒன்றாக எழும்பூரில் உள்ள காந்தி சிலை, மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அருங்காட்சி வளாகத்தின் ‘வளர்கலைக் கூடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ’காந்தியும் உலக அமைதியும்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை இருவரும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் சாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பர்ந்தாமன், ஜே.ஜே. எபிநேசர், ஆர். மூர்த்தி, ஆர்.டி.சேகர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், சுற்றுலா பண்பாடு மற்று, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தர மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புகைப்படக் கண்காட்சி அரங்கிற்கு அருகில் செல்ஃபி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காந்தி பற்றிய புத்தகங்களின் முதல் பக்கம் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ட்விட் :
இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்! pic.twitter.com/7tdVu5pf7A
— M.K.Stalin (@mkstalin) January 30, 2023
மகாத்மா காந்தி நினைவுதினத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ராஜ் கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
#MartyrsDay | President Droupadi Murmu pays tribute at Raj Ghat in Delhi, on #MahatmaGandhiDeathAnniversary pic.twitter.com/HZQmWtl9Vu
— ANI (@ANI) January 30, 2023
பிரதமர் மோடி ட்வீட்:
I bow to Bapu on his Punya Tithi and recall his profound thoughts. I also pay homage to all those who have been martyred in the service of our nation. Their sacrifices will never be forgotten and will keep strengthening our resolve to work for a developed India.
— Narendra Modi (@narendramodi) January 30, 2023