மின்சார ரயில் சேவையில் மாற்றம்;கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து கழகம் தகவல்!
தாம்பரம் வழிதடத்தில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
![மின்சார ரயில் சேவையில் மாற்றம்;கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து கழகம் தகவல்! Tambaram Railway Station Maintenance Work additional buses Chennai Metropolitan Transport Corporation மின்சார ரயில் சேவையில் மாற்றம்;கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து கழகம் தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/15/a8f0e2b5e97d2e02262fac65eb0ddf3e1723729767080333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தாம்பரம் Yard-ல் மேம்பாட்டு பணிகள் தொடர இருப்பதால் மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் இன்று முதல் (15.08.2024) 18ம் தேதி வரை கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்:
சென்னை அடுத்த தாம்பரம் யார்டில் சிக்னல் மேம்பாடு உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டாவளங்களில் 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ஜல்லி கற்கள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புறநகர் மின்சார பொருத்தவரை, சென்னை கடற்கரை தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 63 மின்சார ரயில் சேவை ஆக.14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மின்சார ரயில் சேவை ரத்து ஆக.18-ம் தேதி மதியம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்:
மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆக.15 முதல் 18ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 மணி முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் தென்ற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் ஆகஸ்ட் 15 -18 வரை தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 ஒஏருந்துகளும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளையும் இயக்கப்பட உள்ளது.
பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வே நிலையத்திற்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகளையும் இயக்கப்படும்.” என்று அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)