மேலும் அறிய
TNPSC தேர்வில் வெற்றி: காவல் ஆய்வாளரின் சாதனை! துணை காவல் கண்காணிப்பாளராக உயர்ந்த ராமலிங்கத்தின் உத்வேகம்!
சென்னை காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே , தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்ற ஆய்வாளருக்கு அருண் பாராட்டு.

காவல் ஆய்வாளர் ராமலிங்கம் , காவல் ஆணையாளர் அருணிடம் பாராட்டு பெற்றார்
Source : Whats app
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (TNPSC) என்பது , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வாகும். இந்தத் தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் போன்ற பல்வேறு உயர் பதவிகளுக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்து நியமிக்கிறது. இந்தத் தேர்வு குரூப் I , குரூப் II , குரூப் II A, மற்றும் குரூப் IV போன்ற பல குரூப்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
குரூப் I தேர்வு ; துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர் போன்ற உயர் மாநிலப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
குரூப் II & II A தேர்வு : இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் , நகராட்சி ஆணையர் போன்ற நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
குரூப் IV தேர்வு; பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, பொருளாதாரம், திறனறிவு, பொது தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியது.
ஆய்வாளர் டூ துணை காவல் கண்காணிப்பாளர் ;
சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் ராமலிங்கம் 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் , சென்னை அம்பத்தூர் , மத்திய குற்றப் பிரிவு , நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் பணிபுரிந்து 2025 - ம் ஆண்டு காவல் ஆய்வாளராக பதவி உயர் பெற்றார்.
காவல் ஆய்வாளர் துறை அனுமதியுடன் கடந்த 2024 - ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வில் கலந்து கொண்டு , தேர்வில் வெற்றி பெற்று 2025 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வு பெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.
(04.09.2025) அன்று காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டு, தொடர்ச்சியாக ஊக்கத்துடன் பல்வேறு உயர் பதவிகளுக்கான அரசு தேர்வுகளில் பலமுறை கலந்து கொண்டு, தேர்ச்சி பெற்றும் இறுதியாக காவல் துறையில் துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை பெற்று , 07.09.2025 முதல் பணிப் பயிற்சிக்கு அறிக்கை செய்ய உள்ள காவல் ஆய்வாளர் S.ராமலிங்கம் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















