மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : பாலாற்று வெள்ளத்தில் கரை ஒதுங்கிய ஹயக்ரீவர் சிலை.. கருவூலத்தில் ஒப்படைப்பு..
ஹயக்ரீவர் சிலையை காஞ்சிபுரம் வட்டாட்சியர் லட்சுமி தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாவட்டத்தின், அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து பாலாறு மற்றும் செய்யாறு அருகே வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்துள்ள வளதொட்டம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கமுக்கபள்ளம் கிராம பகுதி பாலாற்று கரையை ஒட்டி உள்ளது.
இந்நிலையில் நேற்று அதே வளதொட்டம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஆற்று கரையோரம் சென்றபோது கரையோரம், சாமி சிலை ஒன்று கிடப்பதை கண்டு அதை சுத்தம் செய்து வெளியே எடுத்தார். சிலையும் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டபின், ஆற்றில் கிடைத்த சிலை உலோகத்திலான ஹயக்ரீவர் என அழைக்கப்படும், கல்வி கடவுளின் சிலை என அறிந்து கிராம நிர்வாக அலுவலர் அப்தல்பஷீத்திடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் பிரேமாவதி உடன் காஞ்சிபுரம் வட்டாட்சியர் லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அச்சிலை சுமார் ஒன்றரை அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட உலகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இச்சிலையினை அரசு விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கருத்தில் ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் லட்சுமி தெரிவித்தார். பாலாற்று வெள்ளத்தில் சிக்கி கரை ஒதுங்கிய உலோக ஹயக்ரீவர் சிலை பார்க்க அழகான வடிவமைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிலை எந்த காலகட்டத்தை சார்ந்தது இச்சிலை எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
மேலும் படிக்க..
#BREAKING | சென்னை - அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட இடங்களில் கனமழை...https://t.co/wupaoCQKa2 #TNRains #ChennaiRains pic.twitter.com/UcJDfcWgRI
— ABP Nadu (@abpnadu) November 25, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion