மேலும் அறிய
Advertisement
அதிகாரிகள் அலட்சியம்; மழையில் நனைந்து முளைத்த நெல்மணிகள்!
காஞ்சிபுரத்தில் அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு வராத காரணத்தினால் எதிர்பாராமல் பெய்த மழையில் நெல் மணிகள் நனைந்து வீணாகின.
காஞ்சிபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெடுஞ்சாலையில் கிராமங்களிலும் குவியல் குவியலாக நெல்மணிகளை வேதனையுடன் குவித்து வைத்திருக்கும் பரந்தூர் கிராம விவசாயிகள்.அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து வளரும் அவலம்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்டது பரந்தூர் கிராம ஊராட்சி.பரந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பரந்தூர், பள்ளபரந்தூர்,நாகப்பட்டு, காட்டுபட்டூர்,ஆகிய கிராமங்களில் விவசாய தொழிலே பிரதானமாக உள்ள நிலையில் இந்த அறுவடை காலத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை விளைச்சல் நன்றாகவே வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பரந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் நிலையம், இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில்,
திறக்கப்படாமல் உள்ளது.நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவியல் குவியலாக கொட்டி வைத்து காத்திருக்கின்றனர். மேலும் இடம் இல்லாத காரணத்தினாலும் நெடுஞ்சாலைகளிலும், கிராம வீதிகளிலும் தங்கள் வீட்டு வாசல்களிலும் விவசாயிகள் நெல்மணிகளை குவியல் குவியலாக கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.
அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையில் நெல்மணிகள் நனைந்து முளைத்தும் வருகின்றது.அறுவடை செய்த நெல்லை குவியல் குவியலாக கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடமும், பரந்துர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் உள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் பரந்தூர் கிராம விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அலட்சியமாக செவி சாய்க்காமல் உள்ள காரணத்தினால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பரந்தூர் விவசாயிகள் தாங்கள், பயிரிட்ட நெல்மணிகள் கண்ணெதிரே பாழாகி வருவதை விட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகத்திலும் கொண்டு சென்று கொட்டி விடலாம் என முடிவெடுத்து உள்ளதாகவும், ஆகவே விவசாயிகளான தங்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பரந்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரசு சார்பில் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதால் தான் இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படுவதாகும், ஒவ்வொரு அறுவடையின் போதும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை சரியான நேரத்தில் திறக்காமல் இருப்பதால் அறுவடையின் பொழுது நெல்மணிகள் வீணாகுவதால் , அரசு உடனடியாக தலையிட்டு இங்கு நிரந்தரமாக கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion