மேலும் அறிய
Advertisement
சென்னை, காஞ்சிபுரம் உட்பட தமிழ்நாட்டின் வடக்கு மண்டலங்களில் முக்கியச் செய்திகள்..
வாகனங்கள் பறிமுதல், ஷார்ட் பிலிம் எடுக்க கடத்தல் நாடகம், மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. முழு ஊரடங்கின்போது சென்னையில் தேவையின்றி இயக்கப்பட்ட 929 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
2. சென்னை திருவல்லிக்கேணியில் குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால், தந்தையிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தல் நாடகமாடிய மகனை போலீஸார் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
3. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியாகி உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியும் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (பொது) மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 மாநகராட்சி மேயர் பதவி மகளிருக்கு (பொது பிரிவு) ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது அரசு. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சிகள் மகளிருக்கு (பொது பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. சென்னையில் நேற்று திடீரென மழை பெய்த நிலையில் தற்போதும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.. இதனிடையே இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பொழியும் என்று வானிலை மையமும் தெரிவித்துள்ளது.
5. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வடலூர் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
6. தொழில் நிறுவனங்கள் வரும் 31ம் தேதிக்குள் ஆண்டறிக்கையை அனுப்ப வேண்டும், என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
7. நேற்று மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதால், கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால், கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.
8. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு செல்வது தொடர்பான தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
9. திருவண்ணாமலை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள ஏரியில் ஆட்டை குளிப்பாட்டச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை உட்பட மூன்று சிறுமிகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
10. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று ஆற்றுத் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion