மேலும் அறிய
Governor About Ghee Pongal : தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பிடித்த உணவு, நெய் பொங்கல், கேசரி..” : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
![Governor About Ghee Pongal : தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பிடித்த உணவு, நெய் பொங்கல், கேசரி..” : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு Sivananda Saraswathi Sevashram 75 year tamil Nadu Governor RN Ravi said that his favorite food in Tamil Nadu is ghee Pongal Governor About Ghee Pongal : தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பிடித்த உணவு, நெய் பொங்கல், கேசரி..” : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/20/6f173455f304d94cfd85809a0d21e7c91674201796423109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆர்.என்.ரவி
பவள விழா
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75-வது பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் நிர்வாக இயக்குனர் லட்சுமி ராஜாராம், நிறுவனத்தின் தலைவர் கிஷோர் குமார் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![Governor About Ghee Pongal : தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பிடித்த உணவு, நெய் பொங்கல், கேசரி..” : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/20/42b5033a5b018785622b42152d64615a1674201734355109_original.jpg)
பொங்கல் பிடிக்கும்
இதனை தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, "இதில் பள்ளி மாணவி ஒருவர் தமிழ்நாட்டில் தங்களுக்கு பிடித்த உணவு எது?” என்று ஆளுநரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ஆளுநர், ”தனக்கு சிறுவயது முதலே உணவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. உணவு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல் உணவு மிகவும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் பிடிக்கும்” என தெரிவித்தார்
![Governor About Ghee Pongal : தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பிடித்த உணவு, நெய் பொங்கல், கேசரி..” : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/20/ccb0002c575042d8ab3fc7bea20c1ea81674201775622109_original.jpg)
தொடர்ந்து பேசிய அவர், ”தனக்கு இனிப்பு வகைகளில் கேசரி மிகவும் பிடித்தமான ஒன்று எனவும், மாணவர்கள் தங்களுடைய கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்றால் தங்களுடைய பலத்தை தெரிந்துகொள்ள வேண்டும், அதைக்காட்டிலும், படிப்பு விஷயத்தில் அதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும், எடுத்துக்காட்டாக ஆலமரத்தின், விதை சமையலுக்கு பயன்படும் கடுகை விட சிறியது. ஆனால் அது மரமாகும்போது மிகப்பெரியதாக வளரும் என தெரிவித்தார். தற்போது 24 -மணி நேரமும் இன்டர்நெட் வசதி உள்ளது. இன்டர்நெட் நல்லதுதான். ஆனால் அதை எல்லாவற்றுக்கும் நல்லதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் அதை விட மாணவர்களுக்கு பயன்படும் கருவி வேறு ஏதும் இல்லை” என பேசினார். ”நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே என் தந்தை கூறியதற்காக பகவத் கீதையை படித்து முடித்தேன். சுமார் 700 ஸ்லோகங்களை மனப்பாடமாக படித்தேன்” என மாணவர்கள் மத்தியில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மற்றும் மாணவினர் கலந்து கொண்டனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion