இன்ஸ்டாகிராம் பழக்கம் !! அடிக்கடி உல்லாசம் !! பணத்தால் பறிபோன உயிர்
ஆன்லைன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருக்கும் போது பிரச்சனை ஏற்பட்டதால் பறிபோன பெண் உயிர்

இன்ஸ்டாகிராம் காதல்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் , தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா ( வயது 33) எனும் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பிள்ளை பகுதியை சேர்ந்த பார்த்திபன் ( வயது 35 ) என்பவருக்கும் சாலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பணம் தொடர்பாக வாக்குவாதம்
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில் , சம்பவத்தன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்குள் பண விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதம் வெடித்ததாக கூறப்படுகிறது. தான் கேட்ட பணத்தை தராமல் பார்த்திபன் ஏமாற்றுவதாக சாலா குற்றம் சாட்டியதால், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பார்த்திபன், சாலாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
எவ்வித சலனமும் இன்றி அறையைப் பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி தனது சொந்த ஊரான இளம் பிள்ளையில் பதுங்கிக் கொண்டுள்ளார். விடுதி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த ஏற்காடு போலீசார், விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
சுற்றி வளைத்த காவல் துறை
அதில் பார்த்திபன் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த பார்த்திபனை சில மணி நேரங்களிலேயே சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான பார்த்திபனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















