மேலும் அறிய
Advertisement
காண்டாமிருக தினம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகங்களை தத்தெடுத்த தனியார் நிறுவனம்
’’20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 5,00,000 காண்டாமிருகங்கள் இருந்த நிலையில் தற்போது அவை வெறும் 29,000ஆக குறைந்துள்ளன’’
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 2452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி ,யானை, கரடி, ஒட்டகச் சிவங்கி ,நீர்நாய், வெள்ளைப் புலி ,காண்டாமிருகம், காட்டெருமை மற்றும் பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதால் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் இது உள்ளது. பூங்காவின் செலவினங்களை குறைப்பதற்காக, விலங்குகளை பராமரிப்பதற்காக விலங்குகளை தடுப்பதற்காக பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு தரப்பினர் விலங்குகளை தத்து எடுத்து வருகின்றனர்.
தற்பொழுது வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம், தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் வாழும் காண்டாமிருகங்கள் ஒற்றைக்கொம்பு காண்டா மிருகங்கள் ஆகும். உலகளவில் தந்தத்துக்கு நிகரான விலை கிடைப்பதால் கொம்புக்காக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன.
இதனால் அழியும் இனங்களின் பட்டியலில் காண்டாமிருகம் உள்ளது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியாவிலும் மற்றும் ஆப்பிரிக்காவிலும் 5,00,000 காண்டாமிருகங்கள் இருந்தன. தற்போது உலக அளவில் 29,000 காண்டாமிருகங்களே வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. காண்டாமிருகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி அன்று உலக காண்டாமிருக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காண்டாமிருகங்கள் தினத்தை முன்னிட்டு DCKAP என்கின்ற தனியார் நிறுவனம் இரண்டு காண்டாமிருகங்களை தத்தெடுத்து உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கூறுகையில், DCKAP அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனம், இது தற்போது சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது ஆகும். எங்களுடைய பிராண்ட் சிம்பிள் என்று சொல்லக்கூடிய முத்திரைக்குறி ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் ஆகும். இந்த வகை காண்டாமிருகங்கள் அஸ்ஸாமில் மட்டுமே, காணகூடிய அரிய உயிரினம். காண்டாமிருகம் தனித்தன்மையும், பலமும் கொண்டது. தன்னை மட்டுமன்றி சுற்றுசூழலையும் பாதுகாக்கிறது.
சுற்றுப்புற அக்கறையும், சமூக வளர்ச்சியுடன் கூடிய வணிகமே DCKAP நிறுவனத்தின் குறிக்கோளும் கூட. அரிய இந்த விலங்கினத்தை பாதுகாக்கும் எண்ணத்தோடு, இன்று வண்டலூர் தேசிய உயிரியல் பூங்காவில் ராமு, ரைன் என்ற இரண்டு ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களை தத்தெடுத்துள்ளோம். அழிந்துவரும் காண்டாமிருகங்களை காப்பதற்காக இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளதாக நம்புகிறோம் என தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion