மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
100-வது நாள் போராட்டம்; குவிக்கப்பட்ட ஏராளமான போலீஸ் - பதற்றத்தில் பரந்தூர்..!
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை இரண்டாவது விமான நிலையம்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஆனது பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட்டவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. விமான நிலையம் இங்கு அமையும் பட்சத்தில் பாதிப்புகளுக்கு உள்ளாகின்ற, சுற்றியுள்ள 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என முழுவதும் பாதிப்புகளுக்குள்ளாகின்ற ஏகனாபுரம், நெல்வாய், மேலேரி போன்ற நான்கு கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது பணிகளை முடித்துவிட்டு, மாலை வேளையில் ஒன்றுகூடி அடையாள போராட்டதினை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது பள்ளி சிறுவ, சிறுமியர் என பலரும் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை அனுதினமும் தொடர்ந்து, தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலகத்தை நோக்கி நடைபெறும் போராட்டமானது, அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோரது ஏற்பாட்டில் அமைச்சர்கள் தலைமையில் தலைமை செயலகத்தில் ஏகனாபுரம் கிராமத்தினை சேர்ந்த முக்கியஸ்த்தர்களிடம், பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. விரைவில் உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என அமைச்சர்கள் உறுதியளித்து, அந்த தலைமை செயலக நோக்கி நடைபயணம் போராட்டதினை, கைவிட கேட்டுகொண்டதற்கிணங்க அந்த முற்றுகை போராட்டம் மட்டும் கைவிடப்பட்டு மாலை நேர போராட்டமானது தொடர்ந்து வந்தது.
நூறாவது நாள் போராட்டம்
இந்த போராட்டமானது இன்று 100-வது நாள் எட்டியுள்ளதால், ஏகனாபுரம் அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஆண்கள் மொட்டை அடித்து, கொண்டு நெற்றியில் நாமமிட்டபடி, திரு ஓடுகளை கைகளில் ஏந்தி ஒவ்வொரு வீதிகளாய் சென்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, பரந்தூர் புதிய விமான நிலையம் எதிர்ப்பு குழுவினர் அறிவித்திருந்தனர்
மீண்டும் சமாதான பேச்சு
இந்த நிலையில் நேற்று ஏகனாபுரம் போராட்ட குழுவினரை அழைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக எடுத்து கூறியதையொட்டி நள்ளிரவில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடானது ஏற்பட்டு இந்த மொட்டை அடித்து திருவோடுகள் ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டமானது தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர்.
காவல்துறை குவிப்பு
ஆயினும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அருகிலுள்ள வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற 3 மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு குறிப்பிட்ட அளவிலான போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இந்த 13 கிராமங்களின் நுழைவு வாயிலான பொன்னேர்க்கரை, சுங்குவார்சத்திரம், கண்ணந்தாங்கல் போன்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கிராமமே பரபரப்புடன் காணப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion