நாளை, நாளை மறுநாள் எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.? உதவி எண்களை நோட் பண்ணிக்கோங்க மக்களே.!
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், முக்கிய அறிவிப்புகளை தெரிந்து கொள்வது அவசியாமகும்.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் எந்த பகுதிகளில் ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் உதவி மற்றும் புகார் எண்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
ரெட் அலர்ட்:
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை நாளை (அக்.15) தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (அக்.15) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
நாளை ( அக்.15 ) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்:
நாளை ( அக்.15 ) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள்:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மாநகராட்சியின் 1913 உதவி எண், கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் மற்றும் சமூக வலைதளங்களிலும் தெரிவிக்கலாம்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 2561 9206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிகளிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
சென்னை மண்டலவாரியாக உதவி எண்கள்:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி நிலையி,ல் ஒரு மண்டலக் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நிலையில் நியமிக்கப்பட்டுள்ள 15 மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அவர்களின் கைபேசி எண்கள் விவரம்
சமூக வளைதள பக்கங்கள்:
மேலும் மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், Greater Chennai Corporation - Facebook, @chennaicorp என்ற Instagram-லும் @chennaicorper Thread-லும் @chennaicorp - X ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது