பிளாக் மெயில் ஏஜென்சி போல் அமலாக்கத்துறை செயல்படுகிறது - ஆர்.எஸ்.பாரதி
அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது - ஆர்.எஸ் பாரதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
ரூபாய்1000 கோடி முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை பா.ஜ.க. வுக்கு எதிரான கட்சிகள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எப்படியாவது திமுக அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கில் அமலாக்கத்துறை செயல்பட்டு வந்தது.
அமலாக்கத்துறை பிளாக் மெயில் ஏஜென்சி
அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பா.ஜ.க - வின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு பிறகாவது மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அமலாக்கத் துறை பிளாக் மெயில் ஏஜென்சி போல செயல்படுகிறது.
திண்டுக்கல்லில் அமலாக்கத் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்ட செய்தியை பார்த்தோம். அமலாக்கத்துறை என்பது பிளாக் மெயில் அமைப்பு போன்று செயல்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டி உள்ளது.
அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணை வேந்தர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.





















