மேலும் அறிய

Pugar Petti: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவலம்: சுகாதாரமற்ற கழிப்பறையால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

" அதிகளவு நோயாளிகள் மற்றும் நோயாளிகள் உறவினர்கள் பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்"

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினமும் உள்நோயாளிகள் 4 ஆயிரம் பேரும், வெளிநோயாளிகள் 3 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் செங்கல்பட்டு வழியே செல்வதால், இந்த பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படும்.
 
இதில் காயம் அடைவோரும், செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் இங்கு சிகிச்சை எடுத்து விட்டு செல்கின்றனர்.
 
தினமும் நோயாளியை பார்க்க ஏராளமான உறவினர்களும் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அந்தந்த வார்டுகளில் ஒரு கழிப்பறை, ஒரு குளியலறையும், பெரிய வார்டுகளில் 2 கழிப்பறை, 2 குளியலறை வசதியும் உள்ளது. அதிலும் அடிக்கடி தண்ணீர் வராமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோயாளியை பார்க்க வரும் உறவினர்களுக்காக 3 கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அவற்றில், போதிய பராமரிப்பு இல்லாமல் கதவுகள் உடைந்துள்ளன.
 
இதனால் அதிகளவு நோயாளிகள் மற்றும் நோயாளிகள் உறவினர்கள், கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இரண்டு கழிப்பறைகள் மட்டுமே செயல்பட்டாலும் தண்ணீர் வராமல் இருப்பதால் கழிப்பறை சுத்தம் இல்லாமல் மிக மோசமான நிலைமையில் காட்சியளிக்கிறது.
 
தொடர்ந்து இது குறித்து புகார் தெரிவித்தும், மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget