Property Tax: மக்களே ஒரு குட் நியூஸ்.. சொத்து வரி செலுத்துபவரா? சென்னைவாசிகளுக்கு புதிய அறிவிப்பு...இதோ விவரம்...
Property tax: சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி மற்றும் கட்டண விவரங்களை அறிய புதிய அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
Property tax: சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி மற்றும் கட்டண விவரங்களை அறிய புதிய அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, சொத்து வரி அடையாள அட்டை வழங்க உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் கட்டக்கூடிய சொத்து விவரங்கள் இருக்கும். அடையாள அட்டைகளில் உரிமையாளர்களின் பெயர்கள், சொத்து வரி ஐடி மற்றும் QR குறியீடு ஆகியவை ஸ்கேன் செய்யும்போது சொத்து, அதன் அளவு, வரி நிலுவைத் தொகை மற்றும் இதற்கு முன்பு செலுத்திய தொகை போன்ற அனைத்து விவரங்களும் அடையாள அட்டைகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
QR குறியீடுகளையும் பயன்படுத்தி, உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் சென்னை மாநகராட்சி ஆணையரின் கையொப்பம் இருக்கும்.
மேலும் இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கூறியதாவது, பலருக்கு சொத்து அடையாள அட்டைகள் குறித்த விவரங்கள் சரிவர இல்லாததால், உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் சொத்து உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை அவர்களது வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் புவியியல் தகவல் அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், சுமார் 3 லட்சம் சொத்துகள் குறை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இந்த சொத்துக்களை மறுமதிப்பீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும். சொத்து வரி வசூலை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியை விட, 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சென்னையில் சொத்து வரி வசூல் ரூபாய் 293 கோடி அதிகரித்துள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தொடங்கியது. சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 4 லட்சம் பேர் அக்டோபர் 10 ஆம் தேதி வரை தங்கள் சொத்து வரியைச் செலுத்தியுள்ளதாக பெருநகர மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.