Crime : அதிக விலைக்கு மதுபானம் விற்ற ஜோடி.. பேர தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பயங்கரம்..!
சென்னையில் அதிக விலைக்கு மதுபான பாட்டில் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அதிக விலைக்கு மதுபான பாட்டில் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியந்தோப்பு ஜே.ஜே. நகர் 7-ஆவது தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (36). இவரது மனைவி நீலாவதி(35). இவர்கள் இருவரும் மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர். அந்த வகையில் கடந்த 5 ஆம் தேதி இவர்களது வீட்டுக்கு சென்ற வ.உ.சி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் குவாட்டர் வேண்டும் என்று கூறி 190 ரூபாய் கொடுத்துள்ளார்.
அதற்கு 200 ரூபாய் கொடுத்தால்தான் மதுபாட்டில் தருவோம் என பரத்குமாரும் அவரது மனைவியும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஸ்ரீதருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாற, ஸ்ரீதர் தனது நண்பரான வியாசர்பாடியை சேர்ந்த மணி என்ற தொட்டிமணியை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து மதுபாட்டில் தர மறுத்த பரத்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த நிலையில் பரத்குமார் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு பதிலுக்கு ஸ்ரீதரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தகராறில் படுகாயமடைந்த இருவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த புளியந்தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பரத்குமார், நீலாவதி மற்றும் ஸ்ரீதருக்கு உதவிய நண்பர் மணி ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஸ்ரீதர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்து படுகாயமடைந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.ய்
----------------
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பால்நல்லுர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவிஷ்கா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக பலகாரம் சுட்டுள்ளனர். பின்னர் சூடான எண்ணையை சட்டியுடன் கீழே இறக்கி வைத்துள்ளனர். அப்போது, பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்த குழந்தை பவிஷ்கா திடீரென வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே இருந்த எண்ணை சட்டியில் குழந்தை தவறி விழுந்துள்ளது.
இதில் குழந்தையில் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவரை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தை பவிஷ்காவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பெற்றோர்கள், சற்று கவனக்குறைவாக இருந்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தை தவறுதலாக என்னை தொட்டியில் விழுந்து படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது தொடர்பாக உறவினர்களும் விசாரணையும் நடைபெற்றது என தெரிவித்தனர்
கவனக்குறைவு காரணமாக எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த குழந்தை, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.