மேலும் அறிய

Power Shutdown: பராமரிப்பு காரணங்கள்: சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்

Power Cut Today: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று ( பிப்.28 ) பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது

மின் பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும்.

அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.  பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பட்சமாக மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

கீழ்காணும் பகுதிகளில் இன்று ( பிப்.28 ) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கிண்டி:

ஐபிசி காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், பூதப்பேடு, நெசப்பாக்கம், ஜெய்பாலாஜி நகர் & கான் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதி, தனகோட்டி ராஜா தெரு, முனுசாமி தெரு, ராஜ்பவன், வண்டிக்காரன் தெரு ஒரு பகுதி, நேரு நகர் பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் மகாலட்சுமி நகர் 10வது தெரு, வானுவம்பேட்டை நங்கநல்லூர் பி.வி.நகர் மடிப்பாக்கம் எல்.ஐ.சி நகர் முழுவதும் மூவரசன்பேட்டை இந்து காலனி முழுவதும்.

போரூர்:

திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணாநகர், பூந்தண்டலம், 11, 12 மற்றும் 13வது தெரு/ திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர் முழு குமரன் நகர், ஆறுமுகம் நகர், மேல்மா நகர், இரண்டம் கட்டளை காவனூர் நடுப்பத்தை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு, முகலிங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்பேட்டை:

டி.எச்.ரோடு ஜி.ஏ.ரோடு ஒரு பகுதி, பால அருணாச்சலம் தெரு, கப்பால் போலு தெரு ஒரு பகுதி நாப்பாளையம் மணலி புதுநகர், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில் நகர், வெள்ளிவயல், கொண்டக்கரை, எம்.ஆர்.எப்.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

தாம்பரம்:

ராஜகீழ்ப்பாக்கம் சாம்ராஜ் நகர் 1 முதல் 8-வது தெரு, வலச்சேரி மெயின் ரோடு, குருசாமி நகர், அம்பேத்கார் தெரு முடிச்சூர் முல்லை நகர், முத்துமுருகன் நகர், மகாலட்சுமி நகர், சக்தி நகர் பம்மல் வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, எம்.ஜி.ஆர் நகர், அன்னபெசன்ட் தெரு, அண்ணாசாலை குறுக்கு தெரு சிட்லபாக்கம் அவ்வை தெரு, காமராஜர் தெரு, 100 அடி சாலை, திருவள்ளுவர் நகர் பஜனை நகர், பல்லாவரம் பஜனை தெரு.

ஆதார் எண் இணைப்பு:

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.

 நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget