மேலும் அறிய
Advertisement
திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தை..! கணவனுக்கு பயந்து ஏரியில் வீசிய தாய்..! சென்னையில் கொடூரம்..!
சென்னை வேளச்சேரியில் திருமணத்தை மிறீய உறவால் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னை வேளச்சேரியில் திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை
சென்னை ( Chennai News ): சென்னை வேளச்சேரி, சசிநகா் அருகே உள்ள ஏரியில் பிறந்து சில மணி நேரமே, ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மிதப்பதை கடந்த திங்கட்கிழமை அன்று அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்த தகவலை காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, வேளச்சேரி போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஏரியில் வீசி கொலை
இதனை அடுத்து இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். வேளச்சேரி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் சங்கீதா (26) என்பவரின் குழந்தைதான் அது என்பது தெரியவந்தது. திருமணமான நிலையில், சங்கீதாவுக்கு திருமணத்தை மீறிய உறவு மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தையை மறைப்பதற்காக, ஏரியில் வீசி கொலை செய்தாா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து சங்கீதாவை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.
அடிக்கடி தனிமையில் உல்லாசமாக
சங்கீதாவுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 1/2 ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. கார்த்திக் மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் தாய் தந்தை இல்லாததால் இருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் ஒரு பெண் குழந்தை போதும் என முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சங்கீதாவுக்கும், அதே பகுதியில் மல்லிகை நடத்தி வரும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து கணவர் கார்த்திக்கு தெரியாமலேயே சங்கீதா பார்த்து வந்துள்ளார். இதனிடையே சங்கீதா கர்ப்பம் அடைந்துள்ளார். ஆரம்பத்தில் சங்கீதா கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இருந்தும் முடியாததால், வயிறு பெருத்த பிறகும் கணவரை ஏமாற்றி வந்துள்ளார்.
சங்கீதா உண்மையை.
இந்தநிலையில் கடந்த 2-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டு குளியல் அறையிலேயே தன்னிச்சையாக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் கணவருக்கு தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என்பதால் குழந்தையை அருகில் இருந்த ஏரியில் வீசி விட்டு சங்கீதா, வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் குழந்தை ஏரியில் மிதந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சங்கீதா மீது சந்தேகம் அடைந்து நடத்திய விசாரணையில், சங்கீதா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion