மேலும் அறிய

”இதை செய்யுங்கள் உதயநிதி.. 2026 கூட்டணி ஆட்சி தான்..” அன்புமணி சொன்னது என்ன ?

Anbumani Ramadoss Interview: "2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி இருக்கும், அந்த கூட்டணியில் பாமக இருக்கும்"

சென்னை கொரட்டூரில் ரோட்டரி இன்டர்நேஷனல் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். 

உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இந்தியாவில் பேட்மிட்டன் வேகமாக வளர்ந்து வருகிறது. நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது, ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இந்தியாவில் போலியோவை ஒழித்தோம். பேட்மிட்டன் போட்டிக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக உள் விளையாட்டு அரங்கம் வேண்டும். பிற மாநிலங்களில் உள்விளையாட்டு அரங்கங்கள் அதிகம் உள்ளன.

”இதை செய்யுங்கள் உதயநிதி.. 2026 கூட்டணி ஆட்சி தான்..” அன்புமணி சொன்னது என்ன ?

அரசு நடத்தும் பேட்மிட்டன் உள் அரங்கங்கள் குறைவாகவே உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள், ஹைதராபாத், அசாம் போன்ற மாநிலங்களில் இருப்பதை போன்று பன்னாட்டு தரத்தில், சென்னையில் மிகப்பெரிய பேட்மிட்டன் உள் விளையாட்டு அரங்கம் கட்டி தர வேண்டும். அவ்வாறு உள் அரங்கங்கள் கட்டினால், சர்வதேச போட்டிகள் நடத்து ஏதுவாக இருக்கும். தமிழ்நாட்டின் பேட்மிட்டன் கழகத்தின் தலைவராகவும், இந்திய பேட்மிட்டன் துணைத் தலைவராகவும் கோரிக்கை வைக்கிறேன். 

”இதை செய்யுங்கள் உதயநிதி.. 2026 கூட்டணி ஆட்சி தான்..” அன்புமணி சொன்னது என்ன ?

பல சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்த முடியவில்லை ஏனென்றால் அதற்கான இடம் இல்லை. பெரிய போட்டிகளை சென்னையில் நடத்தலாம். சமீபத்தில் சென்னையில் மிகவும் சிரமப்பட்டு தமிழ்நாடு அரசு உதவியுடன், தேசிய சப் ஜூனியர் போட்டி நடைபெற்றது அதில் இறுதி சுற்றுக்கு போட்டிக்கு சென்ற 20 பேரில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  மூன்று பேர் வெற்றி பெற்றார்கள். எனவே பேட்மிட்டன் விளையாட்டுகளை நடத்த பெரிய அளவில் விளையாட்டு அரங்கம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். 

புதிய மருத்துவர்கள் நியமிப்பதில் தயக்கம்

அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை அதனால் மருத்துவர்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளது. மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. புதிய மருத்துவர்கள் நியமிப்பதில் ஏன் அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது .

எவ்வளவு தகுதியான ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசு அறிவிக்கப்படாத கொள்கை முடிவாக தற்காலிக பணி அடிப்படையில், தான் நியமிப்போம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் வெற்றி பெறுவதற்கு முன்பு, நாங்கள் வெற்றி பெற்றால் தமிழக அரசில் ஐந்தரை லட்சம் பணியிடங்களை நிரப்புவோம் என கூறினார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் அவர் பேசியபோது 68,000 பேருக்கு நியமனம் செய்திருப்பதாக கூறுகிறார்கள். அதில் 32000 பேரும் தற்காலிக பணியாளர்கள். 

முதல்வர் கவனம் செலுத்தவில்லை

தனியார் மையமாக மாற்றுவதற்கான முன்னோட்டமாக தற்போது தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். புதிதாக யாரையும் பணியில் சேர்ப்பது கிடையாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியங்கள் வேண்டுமென போராடிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியாவில் 8 மாநிலங்களில் கொடுத்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு மனசில்லை. இதுகுறித்து முதலமைச்சர் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

எங்களுடைய கருத்து

சென்னை உயர்நீதிமன்றம் திமுக மற்றும் அதிமுக , மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுக்காமல் மாறி மாறி குறை சொல்லுகிறார்கள் என்ற கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் , சிரித்துக் கொண்டே அது எங்களுடைய கருத்து என தெரிவித்தார். 57 ஆண்டு காலமாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

”இதை செய்யுங்கள் உதயநிதி.. 2026 கூட்டணி ஆட்சி தான்..” அன்புமணி சொன்னது என்ன ?

ஆனால் 57 ஆண்டுகளுக்கு பிறகும் சென்னை நிலையை பாருங்கள், வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளாததால் மழை வந்தால் படகு எங்கே என்று தேடும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். உலகில் பல்வேறு நாடுகளில் மழை பெய்தால் கூட தண்ணீர் நிற்பதில்லை, பல நாடுகளில்  மழை நீரை சேகரிக்கிறார்கள். வடகிழக்கு மழை தீவிரமாக வரப்போகிறது, ஆனால் அரசு என்ன செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை என தெரிவித்தார்.

 கூட்டணி ஆட்சி தான்

மேலும் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி இருக்கும், அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget