Plan your Commute: பிரதமர் சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம் குறித்து அப்டேட் உங்களுக்காக இதோ!
பிரதமர் மோடி சென்னை வருகையோட்டி, மாநில தலைநகரத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் போக்குவரத்து மாற்றம் குறித்த தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையெடுத்து மாநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்:
பிரதமர் பயணத்தை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரியமேடு பகுதியில் உள்ள சாலைகள், ஈ.வெ.ரா. சாலை, ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளை வாகன ஓட்டிகள் தவிா்க்கும்படியும், குறிப்பிட நேரத்தில் வாகனங்கள் மெதுவாகவே செல்ல முடியும் என்பதால் மாற்று சாலைகளை பயன்படுத்தும்படியும் பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இரவு நிகழ்வு முடிந்த பிறகு நேரு விளையாட்டு அரங்கிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலைகள் அனைத்தும் பிரதமர் கார் செல்வதற்காக பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படவுள்ளது.
பிரதமர் மோடி சென்னை வந்து செல்லும் வரை மேலே குறிப்பிட்டுள்ள சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த தடை இருக்கும் என்பதால் உங்கள் பயண திட்டத்தை கவனமுடன் மேற்கொள்ளவும்.
பிரதமர் சென்னை வருகையின் விவரம்:
பிரதமர் மோடி நாளை தொடங்கும் திட்டங்கள் என்னென்ன..?
- மதுரை – தேனி அகல ரயில் பாதை
- தாம்பரம் – செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை
- எண்ணூர் – செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் – பெங்களூரு இடையே குழாய் வழியே இயற்கை எரிவாயு திட்டம்
- லைட் ஹவுஸ் திட்டத்தில் கட்டப்பட்ட1,152 வீடுகள் திறப்பு
அடிக்கல் நாட்டும் திட்டம் :
- 14 ஆயிரத்து 870 கோடி செலவில் பெங்களூரு - சென்னை இடையே 262 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள விரைவுச் சாலை திட்டம்
- சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு கொண்ட 4 வழி உயர்மட்ட சாலை திட்டம்
- நெரலூரு - தருமபுரி பகுதியில் 4 வழி நெடுஞ்சாலை
- மீன்சுருட்டி - சிதம்பரம் பகுதியில் 2 வழி நெடுஞ்சாலை
- சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில்வே நிலையங்களை மறுசீரமைக்கும் பணி
- சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் வகையில் சென்னையில் அமைக்கப்படவுள்ள ’மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்’ திட்டம்
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடியோடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.