மேலும் அறிய

பயங்கரவாத தாக்குதலில் தந்தை உயிரிழப்பு; மகன் செய்த செயல் - கண்கலங்க வைக்கும் காட்சி

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் உடலுக்கு , சிறுவன் முத்தமிட்டது சுற்றி நிற்பவர்களை கண் கலங்க செய்தது.

பயங்கரவாத தாக்குதல் - பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்பு

காஷ்மீரின் பஹல்காம் நகரின் பைசாரன் மலைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் நடந்த இந்த திடீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 25 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீர வணக்கம்

இந்த பயங்கரவாத தாக்குதலில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த , தகவல் தொழில்நுட்ப பொறியாளர் மதுசூதனன் ராவ் உயிரிழந்தார். இவரது உடல் காஷ்மீரில் இருந்து ஹைதராபாத் வழியாக , இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் , சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தடைந்தது. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் உடலுக்கு , மகன் முத்தமிட்டது சுற்றி நிற்பவர்களை கண் கலங்க செய்தது. இதன்பின்னர், உயிரிழந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பாக அஞ்சலி , வீர வணக்கம் செலுத்தப்பட்டு , உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி , அவரின் சொந்த ஊரான நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது. 

காங்கிரஸ் , பாஜக தலைவர்கள் மரியாதை

சென்னை பழைய விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையால் அளிக்கப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்திருந்த , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை , பாஜக மாநில தலைவர் நயினார் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் செல்வப் பெருந்தகை பேசுகையில் ,

பயங்கரவாதிகளின் இந்த செயல்  மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசு பயங்கரவாதிகளை வன்மையாக கண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பொது மக்கள் மீதான தாக்குதல் என்பது மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட இயக்கம் தான் காங்கிரஸ் பேரியக்கம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் பயங்கரவாதிகளால் தான் கொல்லப்பட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ்  சார்பில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் வீர மரணம் அடைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மதுசூதனன் ராவ்  உடலுக்கு இறுதி மரியாதையும், அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தோம். 

பயங்கரவாதிகளுக்கு மதம் இனம் என்ற அடையாளமே கிடையாது. பயங்கரவாதி என்றால் அவன் பயங்கரவாதி தான். இவ்வாறு பிளவுபடுத்தும் நடவடிக்கையை யாராக இருந்தாலும் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில் ,  

சுற்றுலா சென்ற பயணிகளை இந்துவா ? என கேட்டறிந்து சுட்டுக் கொன்றுள்ளனர். குறிப்பாக நெல்லூரை சேர்ந்த மென்பொருள் மதுசூதனன் ராவ் , தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதமர் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாகவும் உள்துறை அமைச்சர் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் இது போன்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் குடும்பத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget