மேலும் அறிய
Advertisement
திருச்செந்தூர் முருகன் கோவிலில் எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகிறது - ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
மேற்கு வாசல் மூடியே இருக்கிறது இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் காஞ்சிபுரத்தில் பேட்டி
ஜான் பாண்டியன் காஞ்சிபுரத்தில் பேட்டி
திருச்செந்தூர் முருகன் கோவில் மேற்கு வாசல் திருவிழா தேவேந்திர குல வேளாளர்கள் சொந்தமான மேற்கு வாசல் சமூகத்தில் மூலம் நடைபெற்று திருவிழா நடைபெறும் பல ஆண்டுகளாக எங்கள் உரிமையை பறிக்கப்பட்டு, தற்போது வரை மேற்கு வாசல் மூடியே இருக்கிறது இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
உற்சவர் காமாட்சி பூப்பல்லக்கில் ராஜவீதிகளில் பவனி
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை உற்சவர் காமாட்சி பூப்பல்லக்கில் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தொடங்கி நிகழ்மாதம் 8 ஆம் தேதி நிறைவு பெற்றது. அதே தினத்தன்று விடையாற்றி உற்சவம் தொடங்கியது.
இதன் நிறைவுநாளையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மகிழம்பூ மாலைகள் அணிந்து பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனை நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.கண்ணன் , செயலாளர் மதன்குமார் உட்படநிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகிறது
பின் செய்தியாளரை சந்தித்த ஜான்பாண்டியன், திருச்செந்தூர் முருகன் கோவில் மேற்கு வாசல் திருவிழா தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்திற்கு சொந்தமான மேற்கு வாசல், இந்த மேற்கு வாசல் வழியாக எங்கள் சமூகத்தில் மூலம் நெற்கதிரை கடலில் கொட்டி பொங்கல் வைத்து முருகனை வழிபட்டு பிரசாதத்தை பெற்றுக் கொள்ளும் மேற்கு வாசல் திருவிழா நடைபெற்றும். திருவிழா நடைபெறும் பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உரிமையை பறிக்கப்பட்டு தற்போது வரை மேற்கு வாசல் திருவிழா நடைபெறாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தற்போது வரை மேற்கு வாசல் மூடியே இருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சரை மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார். மேலும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion