மேலும் அறிய

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் - ஓ.பி.எஸ்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை அரசு எடுத்து இயக்கும் முடிவை கைவிடவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் - ஓ.பி.எஸ்

இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; 

தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. ஆனால், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் என்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் , 31-07-2021 அன்றைய நிலவரப்படி, 20,557 அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், 1,000 பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 2213 பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

2023-24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 மின்சார பேருந்துகள் உள்பட 3,000 பேருந்துகள் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 7,213 பேருந்துகள், 1,000 மின்சார பேருந்துகள் என 8,213 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காகித வடிவில் இருக்கிறதா ?

2024-25 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து மானியத்திற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 20,260 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2021 ஆம் ஆண்டு இருந்த பேருந்துகளைவிட 2024 ஆம் ஆண்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அப்படியென்றால், 8,213 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் இன்னும் காகித வடிவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

2024-25 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையை கழித்தால்கூட, 4,713 பேருந்துகள் கூடுதலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. எத்தனை பேருந்துகள் கழிவு செய்யப்பட்டன, எத்தனைப் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டன என்ற விவரமும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

தனியார் பேருந்துகளை இயக்கும் அரசு 

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகிறது என்றும் , இதற்காக புதிய பேருந்துகளை வாங்கி , நிறுத்தி வைக்க முடியாது என்றும் , கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பதைப் பார்த்தால் , அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இந்த நடைமுறை முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். இது மட்டுமல்லாமல், அரசிடம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுநர்கள் இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது. அரசின் கொள்கைக் குறிப்பின்படி, தனியார் வசம் 7,764 பேருந்துகள் மட்டுமே உள்ள நிலையில், மிகப் பெரிய நிறுவனங்களாக விளங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகின்றன என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கை. இது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், தனியார் பேருந்துகளின் நிலைமை, அந்த ஒட்டுநர்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு இல்லாமல், தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது என்பது மிகவும் ஆபத்தானது.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு வாங்கப்பட்ட புதிய பேருந்துகளின் எண்ணிக்கை, புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, கழிவு செய்யப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Embed widget