மேலும் அறிய

Telegram ID - யில் இணைப்பு ; ஆன்லைன் முதலீடு மோசடி ; ரூ.24 லட்சம் இழந்த மென்பொறியாளர்

மென்பொறியாளரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி சுமார் ரூ.24.89 லட்சம் மோசடி செய்த பெண் கர்நாடகா மாநிலத்தில் கைது.

டெலிகிராம் ஐடி - யில் இணைப்பு ; 

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மென்பொறியாளர் சுதா கார்த்திக் ( வயது 44 ) என்பவர் சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் , வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி அவர்கள் கூறிய Telegram ID களில் இணைந்து அதில் அனுப்பிய விளம்பரங்களுக்கு Subscribe செய்து சிறிது லாபம் பெற்றதாகவும் பின்னர் அதனை நம்பி மேலும் தொடர்ந்து கொடுக்கப்பட்ட பல்வேறு Task களை முடிக்க வேண்டி மேற்படி நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு புகார் தாரர் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய்.24,89,665/- அனுப்பியதாகவும் , பின்னர் புகார் தாரருக்கு எவ்வித பணமும் திரும்ப கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதா கார்த்திக் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த புகாரின் மீது கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கர்நாடகாவில் பதுங்கியிருந்த குற்றவாளி

கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புகார்தாரர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் விவரங்கள் போன்றவற்றை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளி பயன்படுத்திய Mail ID, Phone Number ஆகியவற்றின் IP விவரங்கள் மற்றும் அதன் Network User ID முகவரி ஆகியவற்றை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் பகுப்பாய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. 

குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கு கொடுத்து பணம் 

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கிருந்த தீபா ( வயது 26 ) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்து, அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் தீபா திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வருவதும், இவர் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கை கொடுத்து பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட தீபா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget