Onion price: காஞ்சிபுரம் ,செங்கல்பட்டில் வெங்காய விலை என்ன தெரியுமா ?
Onion price today kanchipuram: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வெங்காயம் விலை உயர்வு
மகாராஷ்டிரா மாநிலம் வெங்காய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு வெங்காயம் தேவை என்றால் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நம்பி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யாத, காரணத்தினால் வெங்காயம் வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை உயர்ந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் நிலை என்ன ?
காஞ்சிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தக்காளி விலை கிலோ 110 ரூபாய் வரை விற்பனையானது. வெங்காயம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 25 ரூபாயிலிருந்து 30 விற்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய் வரை விற்பனையாகிறது.
செங்கல்பட்டின் நிலை என்ன ?
செங்கல்பட்டு பொருத்தவரை ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ரூபாய் விற்ற வெங்காயம் விலை தற்பொழுது, 70 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.