மேலும் அறிய

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 62 ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகளில் 93 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பாலாற்றில் மையமாக வைத்து ஏராளமான ஏரிகள் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளன. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகள் காரணமாக, அதிக அளவு விவசாயமும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் நிரம்பும் ஏரிகளை நம்பி, காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சார்ந்த பெரும்பாலும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அதேபோல காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குடிநீர் ஆதாரமாகவும் சில ஏரிகள் இருந்து வருகின்றன. 

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த பிரதான ஏரிகள்
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, எடமிச்சி ஏரி, தாமல் ஏரி  ஆகியவை உள்ளன. 
 
வடகிழக்கு பருவமழை
 
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
கடந்த ஓராண்டு மேலாக அவ்வப்பொழுது மழை பெய்து, வந்ததால் ஏரிகள் முழுமையாக வற்றாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
 
பாலாறு படுகை ஏரிகள்
 
காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 1022 ஏரிகள் உள்ளன. அவற்றில் 93 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 38 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 24 ஏரி, சென்னையை மாவட்டத்தை சேர்ந்த 1 ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 30 ஏரிகள் ஆகியவை முழு (100 சதவீத கொள்ளளவு) கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
76% - 99%  கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 ஏரிகள் , செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில்  32 ஏரிகள், சுமார் 76% சதவீதத்திலிருந்து 99% சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
51%- 75% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 143 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 ஏரிகள், திருவண்ணாமலையில் 10 ஏரிகள், சுமார் 51 சதவீதத்திலிருந்து 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
 
26%- 50% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 118 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 174 ஏரிகள்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 1 ஏரி ,26%- 50% கொள்ளளவை எட்டியுள்ளது.
 
25 சதவீதத்திற்கும் கீழ் உள்ள ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 232 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 0 ஏரி, திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் நீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருவதால், கால்வாய்களில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பதால், விரைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்னும் பல ஏரிகள் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget