" ஜெபம் செய்யனும் வா " என அழைத்த ஐ.டி ஊழியர் !! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
சென்னையில் " ஜெபம் செய்யனும் வா " என கூறி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐ.டி ஊழியர் கைது.

" ஜெபம் செய்யனும் வா " என கூறி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐ.டி ஊழியர்
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். இவருக்கு திருமணமாகி 17 வயதில் மகள் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சிறுமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தார்.
அப்போது இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் கந்தசாமி என்பவர் சிறுமியை அழைத்து ஜெபம் செய்ய வேண்டும் வா என கூறி வீட்டிற்குள் அழைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சிறுமி கூச்சலிட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். அதன் பிறகு வேலை முடிந்து தனது தந்தை வீட்டிற்கு வந்தவுடன் நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியின் கீழ் வீட்டில் வசிக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கந்தசாமி ( வயது 40 ) என்ற நபர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து கந்தசாமியை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரயில் மூலம் ஆந்திராவிற்கு சென்று , கஞ்சாவை சென்னைக்கு காரில் கடத்தி கொண்டு வந்த இரண்டு பேர் கைது
சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹஜ் பில்டிங் அருகே பேசின் பிரிட்ஜ் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது அந்த காரில் இரண்டு நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதனையடுத்து காரில் இருந்த அவர்களை இறங்கச் சொல்லி சோதனை செய்த போது அவர்கள் இருவரும் தங்களது முதுகில் டேப் மூலம் சுற்றப்பட்ட கஞ்சாவை கட்டி கொண்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் , அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சென்னை புதூர் கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்கின்ற விஷ்ணு மகா ( வயது 21 ) மற்றும் ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த வினியார்டு ( வயது 19 ) என்பது தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் கடந்த எட்டாம் தேதி ரயில் மூலம் விஜயவாடாவுக்கு சென்று அங்கு ரூ.5,000 கொடுத்து அரை கிலோ கஞ்சாவை வாங்கி வந்து தங்களது உபயோகத்திற்கும் மற்றும் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து விஷ்ணு மகா மற்றும் வினியார்டு ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.





















