மேலும் அறிய

புதிய பத்திரப் பதிவு திட்டம் ; அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவுத் துறை திடீர் உத்தரவு !!

அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கான பத்திரத்தை பதிவு செய்யும் போது, கள ஆய்வு செய்ய வேண்டாம் என பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது

ஸ்டார் 3.0 திட்டம் அமல்

தமிழகத்தில் பத்திரப் பதிவு பணிகளை விரைவு படுத்த ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் குறிப்பிட்ட சில பரிமாற்றங்களுக்கு சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்து வேண்டுமானாலும், பத்திரப்பதிவு செய்யலாம்.

குறிப்பாக புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதற்கான பத்திரப் பதிவு பணிகளை கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்தபடியே மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பத்திரத்தில் தொடர்புடைய, கட்டடத்தின் மதிப்பு சரியாக இருப்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து, அடுக்குமாடி திட்ட வீடுகள் தொடர்பான, இரண்டாவது மற்றும் தொடர் விற்பனையின் போது, கள ஆய்வு செய்யாமல், பத்திரப் பதிவு செய்து கொடுக்க, பதிவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. கள ஆய்வு தவிர்த்து, கால தாமதமின்றி பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழகப் பிரிவு துணைத் தலைவர் பி. மணிசங்கர் கூறியதாவது ; 

பதிவுத் துறை உத்தரவில் நன்மை, தீமை இரண்டும் உள்ளது. நன்மை என்றால், அடுக்குமாடி திட்டங்களில், சிறப்பு வசதிகள் குறித்த விபரங்கள் பத்திரத்தில் இடம் பெற்றால், கள ஆய்வு வேண்டாம் என்பது வரவேற்கத்தக்கது. இதனால், பதிவு முடிந்தவுடன் பத்திரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அடுக்குமாடி குடியிருப்புகளில், கட்டுமான நிறுவனம், வீடு வாங்குவோர் இடையிலான உடன்பாட்டுக்கு மதிப்பு கிடைக்கும்.

தீமை என்றால் , கள ஆய்வு மேற்கொள்ளாத நிலையில், அந்த திட்டத்தில் அனுமதித்ததை விட, கூடுதல் வீடுகள் கட்டப்பட்டு இருந்தால் அது தெரிய வராது. பத்திரத்தில் குறிப்பிட்ட 'லிப்ட், பார்க்கிங்' வசதிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த , வாய்ப்பு இல்லாமல் போகும். உண்மையில் அப்படி ஒரு கட்டடம் தற்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு, பதிவுத் துறையால் பதில் அளிக்க முடியாத நிலை ஏற்படும் என இவ்வாறு அவர் கூறினார்

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Chennai power cut: சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget