செங்கல்பட்டு அருகே 36 கோடி மதிப்புள்ள 9 டன் போதை பொருட்கள் அழிப்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ மற்றும் போதை பொருட்கள் எரியூட்டும் தொழிற்சாலையில் எரியூட்டும் பணி நடைபெற்றது
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போதைப் பொருட்கள் சோதனையில், பல மாவட்டங்களிலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் போதை ஒழிப்புப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டன. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு முடிவடைந்த நிலையில், அவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை, செங்கல்பட்டு அருகே இன்று மார்ச் 8 ஆம் தேதி, போதை ஒழிப்புப் பிரிவு போலீசார் எரித்து அழித்தனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ மற்றும் போதை பொருட்கள் எரியூட்டும் தொழிற்சாலையில் எரியூட்டும் பணி நடைபெற்றது.
மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சுமார் 9 டன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் இவ்வாறு எரிக்கப்பட்டன. போதை தடுப்புப் பிரிவு எஸ். பி. ரோஹித் நாதன் ராஜகோபால், கூடுதல் எஸ்.பி. தாமஸ் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு இதன் மொத்த மதிப்பு ஏறத்தாழ 36 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, சென்னை, மதுரை, கன்னியாகுமரி ,சென்னை புறநகர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் சுமார் 90 வழக்குகளில் தொடர்புடைய சம்பந்தமான பொருட்கள் இங்கு எரியூட்டப்பட்டு உள்ளது. கஞ்சா செடி வளர்ப்பு கைதான அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடியின் பாகங்கள், பல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இங்கு அளிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இங்கு அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் தொழிற்சாலையில் போதைப்பொருட்களை அறிவிப்பதாக தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளில் இதுவே அதிக அளவு எரிக்கப்பட்ட போதைப் பொருள் என காவல்துறையினர் தெரிவித்தனர்
.
போதை பொருட்களை எரிக்கும் பொழுது, போதை தடுப்புப் பிரிவு எஸ். பி. ரோஹித் நாதன் ராஜகோபால், கூடுதல் எஸ்.பி. தாமஸ் பிரபாகர், தடவியல் துறை துணை இயக்குனர்கள் விசாலாட்சி மற்றும் அனுராதா , அசிஸ்டன்ட் கமிஷனர் லட்சுமி மேனன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
Tasmac Price Hike: யாரை கேட்டு விலையை ஏற்றினீர்கள்?கொந்தளித்த குடிமகன்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்