மேலும் அறிய
Advertisement
விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகள்; அகற்ற அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதன் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்கு பதிவு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
அந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்கு ஆணையத்தின் விதிகளை பின்பற்றி இயங்குகிறதா என்பது குறித்து கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தனர்.
அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்குள் இயங்கும் இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது போல, கடலோர மீன் வளர்ப்பு ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டுமென தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடலோரத்திலிருந்து 200 மீட்டருக்குள் இறால் பண்ணைகள் அமைக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அவ்வாறு இயங்கும் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த கடலோர மீன் வளர்ப்பு ஆணையத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை சட்ட விரோதமாக இறால் பண்ணை நடத்தியதற்காக விசாரணை நடத்தி, அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. சட்ட விதிகளுக்குட்பட்டு செயல்படும் இறால் பண்ணைகள் தொடர்ந்து செயல்பட தடை எதுவும் இல்லை எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு கடந்த 29ஆம் தேதி காவல்துறையின் விண்ணப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடந்த 29ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், முன்கூட்டி எந்த நோட்டீசும் அனுப்பாமல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அதே நாளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த இருப்பதாகவும் கூறி, தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையும், தங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது என்பதால், சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion