மேலும் அறிய

Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..

Muttukadu floating restaurant : "பொதுமக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால், அப்பணி முடிவுற்ற பிறகு மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் "

தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் மிதவை உணவகத்திற்கான பணிகள் இன்னும்சில வாரங்களில் நிறைவடையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
 
முட்டுக்காடு படகு இல்லம் 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்பட்டு வரும்நீர் விளையாட்டு மையமாக இயங்கி வரும் படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் விசை படகுகள், மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் என 30க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. வார விடுமுறை, கோடை விடுமுறை நாளில், இங்கு பொழுதுபோக்குவதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.
 
Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..
 
மிதவை உணவகம் - Seanz Cruise

முட்டுக்காடு படகை இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) இதுவாகும். இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்படும். நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..

முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
 
Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..
 
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள், வேகமான இயந்திரப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
 
சிறப்பு அம்சங்கள் என்ன ? 

இந்த இடத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பணி முடிவுற்ற பிறகு மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் , சில வாரங்களில் நிறைவடையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
 
Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..

 எந்த நேரங்களில் செயல்படும் ? - SEANZ CRUISE 

இந்த உணவகம் மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பட உள்ளது.  குழுவாக உணவு அருந்த விரும்புபவர்கள்,  நண்பர்களுடன் உணவு அருந்த விரும்புபவர்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், லைவ் பேண்ட் ( Live Band ) , இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த உணவகத்தை பயன்படுத்தலாம் ‌

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Embed widget