" மது அருந்தலாம் வா " கள்ளக் காதலியுடன் மது அருந்திய போது நடந்த அதிர்ச்சி சம்பவம் !!
எங்கு சென்றாய் என சந்தேகமடைந்து சண்டையிட்டு , சமாதானமடைந்து மது அருந்திய கள்ளக் காதல் ஜோடிகள் - கொலையில் முடிந்த சம்பவம்

" மது அருந்தலாம் வா " கள்ளக் காதலியுடன் மது அருந்திய போது நடந்த அதிர்ச்சி சம்பவம் !!
சென்னை வியாசர்பாடி ஜேஜே நகர் 7 - வது தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ராகுல் என்ற குழந்தைகள் உள்ளனர். பிரியங்கா (வயது 30) கடந்த இரண்டு வருடங்களாக செல்வேந்திரனை விட்டு பிரிந்து தனியாக சென்ற நிலையில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் (வயது 32) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
கடந்த புதன் கிழமை வீட்டை விட்டு சென்ற பிரியங்கா, மீண்டும் ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த கோவிந்தராஜ் பிரியங்காவை எங்கு சென்றாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இரவு சமாதானப்படுத்தி மது அருந்தலாம் வா என கூப்பிட்டு மணலி பகுதியுள்ள தொழிற்சாலையின் பின்புறம் காலி இடத்தில் இரண்டு பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது.
உடனே கோவிந்தராஜ் மது அருந்தி கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக கழுத்து வயிற்று பகுதிகளில் பிரியங்காவை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பிரியங்கா இறந்துள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவிந்தராஜ் வியாசர்பாடி போலீஸ் நிலையத்திற்கு சென்று நான் எனது கள்ள காதலியை குத்திக் கொன்று விட்டேன் எனக் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வியாசர்பாடி போலீசார் அங்கு பிரியங்கா இறந்து கிடந்ததை பார்த்து அந்தப் பகுதி மணலி காவல் நிலைய எல்லை பகுதி என்பதால் உடனே மணலி போலீசாரை வரவழைத்தனர். மணலி போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தராஜை மணலி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பீகாரில் இருந்து சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை
சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர், கடந்த 19.11.2025 அன்று இரவு கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியில் கண்காணித்து அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சில நபர்களை விசாரணை செய்து சோதனை செய்த போது அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த பிரவீன்குமார் ( வயது 23 ) , அரவிந்த் ( வயது 27 ) , ரஞ்சித் ( வயது 28 ) ,பைஜான் அஹமது ( வயது 23 ) , சஞ்சய் ( வயது 23 ) , அஜித் ( வயது 27 ) , சுபாஷ் (வயது 25 ) , ஷதாப் உசேன் ( வயது 27 ) என மொத்தம் 8 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 1,800 எண்ணிக்கைகள் கொண்ட உடல் வலி நிவாரண மாத்திரைகள், 1 ஐபோன் உட்பட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் மீது ஏற்கனவே 3 கொலை முயற்சி உட்பட 11 குற்ற வழக்குகளும், ரஞ்சித் மீது 1 கொலை முயற்சி உட்பட 6 குற்ற வழக்குகளும், சுபாஷ் மீது 2 கொலை முயற்சி உட்பட 9 குற்ற வழக்குகளும், 3 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில் , கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில், ட பீகார் மாநிலத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்ததின் பேரில் , கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் பீகார் மாநிலம் விரைந்து சென்று அராரியா மாவட்டம், அராரியா டவுன் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் இருந்து மேற்படி மாத்திரைகளை வாங்கி சென்றது தெரியவந்ததின் பேரில், உள்ளூர் காவலர்கள் உதவியுடன் விசாரணை செய்த போது ,மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடை உரிமையளார் பெரோஸ் ரிஷா ( வயது 46 ) என்பவரை கடந்த 28.11.2025 அன்று கைது செய்து, அங்குள்ள சரக நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் பெரோஸ் ரிஷா என்பவரது மகன் பகாத் ரிஷா ( வயது 20 ) என்பவர் ஏற்கனவே சட்டவிரோத மாத்திரை விற்பனைக்காக அராரியா காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட பெரோஸ் ரிஷா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.





















