மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: சுடச்சுட.. காலை 7 மணி தலைப்புச்செய்திகள்! இதுவரை நடந்தது என்னென்ன?
Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு கோரி, முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
- தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30, ஆயிரம் ஆக அதிகரிப்பு
- அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் ஆணையம் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான முடிவு இன்று வெளியாகும் என தகவல்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை: உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி அவசியம் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
- மோசடி நிறுவனத்திடம் ரூ.32 லட்சம் லஞ்சம்: சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கபிலன் பணி இடை நீக்கம்
- கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடர்பான வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
- தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்
- கோடை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்: மே மாதம் 3ம் தேதி முதல் ஜுன் மாதம் 28ம் தேதி வரை சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
- தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கான சேர்க்கை - பெற்றோர் இன்று முதல் விண்ணப்பங்களை பெறலாம்
- சென்னை பாரிமுனையில் ஏற்பட்ட கட்டட விபத்து: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
இந்தியா:
- அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது கீழமை நீதிமன்றம் இன்று தீர்ப்பு - மீண்டும் மக்களவை செல்ல வழிபிறக்குமா?
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து சிக்காவி போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம்: முகமது யூசூப் சவனூருக்கு பதிலாக யாசீர் அகமதுகான் பதான் போட்டியிடுவார் என்று அறிவிப்பு
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கான தேசிய அங்கீகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்
- டெல்லியில் கொரோனவில் 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழப்பு - புதியதாக 1,767 பேருக்கு தொற்று
- இணையத்தில் சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்கும் பிரிவுகளுடன் கூடிய, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகம்:
- உலக மக்கள் தொகையில் முதலிடம் பிடித்தது இந்தியா - ஐக்கிய நாடுகள் சபை தகவல்
- சுவிட்சர்லாந்தில் டி-ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு ரூ.50 கோடிக்கு ஏலம்
- மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டும் டிஸ்னி நிறுவனம் - ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்க வாய்ப்பு
- சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே தொடரும் மோதல் - 270-ஐ கடந்த பலி எண்ணிக்கை
- ஏமன் நாட்டில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் உயிரிழப்பு: நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் லக்னோ த்ரில் வெற்றி..ஆவேஷ் கானின் நேர்த்தியான பந்துவீச்சால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்
- ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதல்
- இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் களம் காண உள்ளன
- ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான ஒருநாள் தொடரின் போது, சூதாட்ட நபர் தன்னை அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐ -யிடம் புகார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion