மேலும் அறிய

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் - அமைச்சர் உதயநிதியின் ரியாக்‌ஷன் என்ன?

கார் பந்தயம் நடத்தும் தடத்திற்குள் நாய் வந்தபோது, நாய் ரேஸா கார் ரேஸா என சிலர் விமர்சித்தனர்.

பார்முலா 4 கார் - சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெற்ற இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுத்துறை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, சென்னை மாநகராட்சி, பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட 14 துறைகளை சேர்ந்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்ததற்கான பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; 

பார்முலா 4 கார்பந்தயம் தொடங்கும் போது இந்த கார் பந்தயம் நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகம் இருந்தது. தற்போது கார் பந்தயம் நடந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

தெற்காசியாவிலேயே முதன் முறையாக நடைபெற்ற இரவுநேர பார்முலா 4 கார்பந்தயத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. முதலமைச்சரின் வழிகாட்டுதலில் விளையாட்டு மேம்பாட்டுத் விளையாட்டுத் துறையின்  செயல்பாடுகளில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு.

முதலமைச்சருக்கு அளித்த வாக்குறுதி 100% காப்பாற்றி உள்ளோம்

சென்னையில் நடந்த பார்முலா 4 கார் பந்தயத்தை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அனைவரும் பாராட்டுகின்றனர் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன்பே ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.

பாதுகாப்பாக சிறு அசம்பாவிதம் கூட நிகழாமல் நடத்துவது தான் கார் பந்தயத்தின் உண்மை வெற்றி என முதலமைச்சர் கூறினார். சிறுவிபத்து கூட இருக்காது என முதலமைச்சருக்கு வாக்குறுதி அளித்து விட்டு தான் போட்டியை நடத்தினோம். முதலமைச்சருக்கு அளித்த வாக்குறுதியை 100% காப்பாற்றி உள்ளோம். 

குறிப்பாக , தூய்மைப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது. அதிகாலை, வெயில் என 2 நாட்கள் பந்தய தடத்தை தூய்மையாக வைத்திருந்தனர். போக்குவரத்து காவல்துறையின் பங்கும் முக்கியமானது. நகரின் மையப்பகுதியில் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும் சூழல் இருந்தது.

சிலர் போட்டியை நிறுத்த கூட முயற்சி செய்தனர்

போக்குவரத்து நெரிசலை பெரிய செய்தியாக்க வேண்டும் என சிலர் எதிர்பார்த்தனர். சிலர் போட்டியை நிறுத்தக் கூட சில முயற்சி செய்தனர்.  ஒரு புறம் இயல்பான போக்குவரத்தும், மறுபுறம் கார் ரேஸ் நடந்துக் கொண்டிருந்தது போன்ற வீடியோவை அனைவரும் பார்த்திருப்போம். அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்து போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் விமர்சித்தவர்கள் கூட பாராட்டினார்கள்.

சின்ன விபத்தைக் கூட ஊதி பெருசாக்க சிலர் காத்திருந்தனர். கார் பந்தயம் நடத்தும் தடத்திற்குள் நாய் வந்த போது நாய் ரேஸா கார் ரேஸா என சிலர் விமர்சித்தனர். பார்முலா 1 கார் பந்தயத்திலேயே பந்தய நடத்திற்குள் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் சென்ற நிகழ்வுக் கூட தெரியாத அறிவாளிகள் தான் கார் பந்தயம் குறித்து பேசுகின்றனர்.

கார் பந்தயத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கார் ரேஸ் நடத்தவில்லையென்றாலும் இன்னும் நடத்தவில்லையா என விமர்சனம் செய்திருப்பார்கள். கார் பந்தயத்திற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சாலையையும், போட்டி நடந்த இடத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். 

நினைத்ததை விட அதிகளவிலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தது. கார் ரேஸ் நடத்தக்கூடாது என நினைத்தவர்கள் கூட 2வது நாளில் எங்களுக்கும் கார் ரேஸ் பார்க்க பாஸ் வேண்டும் எனக் கேட்டனர். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது என 3 நாட்கள் நடத்த வேண்டிய ரேஸை 2 நாட்களில் நடத்தி முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார் எனத் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ; 

கார் பந்தயம் நடத்தி முடித்தது அனைவருக்கும் மகிழ்ச்சி தான். எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடந்தது. ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தமிழத்தின் பக்கம் திரும்பியது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் உதயநிதி புறப்பட்டபோது, கோயம்புத்தூரில் அன்னபூர்ண உரிமையாளர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் ஜிஎஸ்டி குறித்து நிகழ்ச்சியை உரையாடல் மற்றும் அந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, எனக்கு தெரியாது என அமைச்சர் உதயநிதி பதிலளித்து சென்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர மேயர் பிரியா, எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மெகநாத் உள்ளிட்டோர் உடன் 14 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Embed widget