மேலும் அறிய

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் முக்கிய மைல்கல்!

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா இன்று கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா இன்று கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த முக்கியமான நிகழ்வு, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்க இருக்கின்றது.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்:

இந்த நிறுவனத்தின் சார்பு வேந்தராக இருந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் புதிய வேந்தர் என்ற வகையில் நிறுவனத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். நிறுவன வேந்தர் A.N. ராதாகிருஷ்ணன் மற்றும் இடைக்கால வேந்தர் R. கோமதி அம்மாள் ஆகியோரின் பண்புகளையும், பாரம்பரியத்தையும் கொண்டுள்ள புதிய வேந்தர் வரும் ஆண்டுகளில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உறுதி மொழிந்தார்.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் முக்கிய மைல்கல்!

நிறுவன வேந்தரின் தொலைநோக்குப் பார்வையும், வளமான நிர்வாகத் திறமையும் அறிந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இந்த நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி வழிநடத்த உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆகாஷ் பிரபாகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார். ஜே.பி. மோர்கன் சேஸ் & கோ- வின் நிர்வாக இயக்குனர் பிரபாகர் எட்வர்ட் இவ்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நவீன் ராகேஷ், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் G.Ra. கோகுல் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதிய வேந்தர் பதவியேற்பு:

அதிகார மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இடைக்கால வேந்தராக இருந்த R.கோமதி அம்மாள், தன்னிடம் இருந்த செங்கோலை புதிய வேந்தரிடம் வழங்கினார். இவ்விழாவில் கலந்து கொண்ட கௌரவ விருந்தினர், புதிய வேந்தரின் கொள்கைகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக அவரது உரையில் கூறினார்.

நிகழ்வின் அடுத்த அங்கமாக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் உறுதிமொழி எடுத்துக் கொண்டு முறையாக கையொப்பமிடுதலைத் தொடர்ந்து, வேந்தராக தனது உரையை வழங்கினார். இவ்வுரையில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதற்கான தனது தொலைநோக்கு பார்வையினை கோடிட்டுக் காட்டினார்.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் முக்கிய மைல்கல்!

மேலும் அவர் உயிர் காக்கும் நலத்திட்டங்களான 80 வயதுக்கு மேல் இருக்கும் முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சையையும். அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கும் உதவும் வகையில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

சார்பு துணை வேந்தராக செயலாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் டாக்டர். சி. கிருத்திகா, நிறுவனத்தின் புதிய சார்பு வேந்தராக பதவியேற்ற ஆகாஷ் பிரபாகரை அறிமுகப்படுத்தினார். மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் வேந்தர் மற்றும் மீனாட்சி கல்வி குழுமத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக புதிய சார்பு வேந்தர் கூறினார்.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் புதிய வேந்தர் மற்றும் சார்பு வேந்தரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பேராசிரியர் டாக்டர் B.சீனிவாசன் இவ்விழாவிற்கான நன்றியுரையை வழங்கினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
Embed widget