மேலும் அறிய

Chennai Corporation Budget: மக்களைத் தேடி மேயர்; சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பிரியா வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்..!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மோகன் இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சிக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். 

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மோகன் இன்று, அதாவது மார்ச் 27 காலை 10 மணிக்கு மாநகராட்சிக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.  ஏற்கனவே கடந்த ஆண்டில் மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த வரி மற்றும் வாடகைகள் வசூல் செய்யப்பட்டுள்ளதால், இம்முறை பல்வேறு புதிய திட்டங்களும், சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்ப்பட்டது. அதேபோல், மாந்கராட்சி உறுப்பினர்களின் வார்டுக்கான மேம்பாட்டு நிதியும் இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகமாக ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பல்வேறு அறிவிப்புகளுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

பட்ஜெட் அறிவிப்புகள்

  • மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.   இதன் மூலம் சென்னையில் உள்ள பொதுமக்கள்  மேயரிடம் நேரடியாக குறைகளைத்  தெரிவிக்கலாம். 
  • கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்வு.
  • சென்னை பள்ளிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
  • 11ம் வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படும்
  • 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு carrer  guidance programme நடத்தப்படும்
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக கற்றல் பயிற்சி வழங்கப்படும்
  • 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவும் வகையில்  இணையதளம் வாயிலாக பயிற்சி வழங்கப்படும்
  • சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்காக 2500 மலேரியா பணியாளர்களுக்கு vector control kits வழங்கப்படும்
  • சென்னை முழுவதும் ஆறு நாய் பிடி வாகனங்கள் மற்றும் ஐந்து மாடு பிடி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்
  • சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் ஐந்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தேசிய தரவுறுதி தரநிலை சான்றிதழ் பெற பணிகள் மேற்கொள்ளப்படும்
  • ஆலந்தூர் மற்றும் ஷெனாய் நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்
  • சென்னையில் நெகிழி தடை தீவிரமாக கண்காணிக்கப்படும். மக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்பிகளை அறிவித்து வருகிறார். 
  • சென்னையில் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளை விஞ்ஞான ரீதியான எரிக்க 5டன் திறன் கொண்ட எரியூட்டி ( incinerator) கட்டமைத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.

  •  

    கும்பையில்லாமல் தூய்மையாக பராமரிக்கும் வார்டுகளை தேர்ந்தெடுத்து வெகுமதிகள் வழங்கப்படும்.

  • சென்னையில் சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்

  •  

    584 பூங்காக்களை நல்ல முறையில் பராமரிக்க 48 கோடி 

  •  

    சென்னையில் உள்ள 25 விளையாட்டு திடல்கள் மேம்படுத்த 5 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்த  மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் வாழ்த்து பெற்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
Embed widget