விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஆபாச சைகை ! போக்சோ சட்டத்தில் கைது ! வியாசர்பாடியில் பரபரப்பு
சிறுமிக்கு அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாச சைகை - போக்சோ சட்டத்தில் கைது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஆபாச சைகை ! போக்சோ சட்டத்தில் கைது ! வியாசர்பாடியில் பரபரப்பு
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 5 வயது சிறுமி. பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் , தன் தாத்தா - பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், எதிர் வீட்டில் வசிக்கும் நபர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாச சைகை காண்பித்துள்ளார். மேலும், கையில் 100 ரூபாயை வைத்துக் கொண்டு சிறுமியை இங்கே வா என அழைத்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ' சட்டத்தில் சத்யா ( வயது 55 ) என்பவரை கைது செய்தனர்.
சாக்லெட் வாங்கி தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள பகுதி ஒன்றில் 2020 ம் ஆண்டில் மூன்று சிறுமியர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறிய 58 வயது நபர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியரின் பெற்றோர், கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின் போலீசார் விசாரித்து 58 வயது நபரை, பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 58 வயது நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறைந்த விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கித் தருவதாக 7 லட்சம் ரூபாய் சுருட்டிய வாலிபர் கைது
சென்னை மேடவாக்கம் அடுத்த மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு, பஜார் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ( வயது 61 ) இவர் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஹோட்டலில் மேலாளராக பணிபுரிகிறார்.
கடந்த 2023 மார்ச் மாதம் தஞ்சாவூரைச் சேர்ந்த தவான் ( வயது 30 ) என்பவர், சில மாதங்கள் அந்த ஹோட்டலின் அறையில் தங்கியுள்ளார். அப்போது, சங்கரிடம் 'ஐபோன், லேப் டாப், டிவி' உள்ளிட்ட மின்னணு பொருட்களை, குறைந்த விலையில் வாங்கி தர முடியும் என தவான் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய சங்கர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ரொக்கமாக என, 7 லட்சம் ரூபாயை தவானிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிய தவான் விடுதி அறையை காலி செய்துள்ளார்.
சங்கர் பலமுறை தவானை தொடர்பு கொண்ட போதும், மின்னனு பொருட்களை வாங்கி தராமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் சங்கர் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் பதுங்கி இருந்த தவானை கைது செய்து விசாரிக்கின்றனர்.





















