Chennai ; இளம்பெண் குளிப்பதை மொபைலில் வீடியோ எடுத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை புழல் பகுதியில் , இளம் பெண் தனது வீட்டில் குளியறையில் இருப்பதை , வீடியோ எடுத்த நபர் கைது.

இளம்பெண் குளிப்பதை மொபைலில் வீடியோ எடுத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண். இவர் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் அருகே சத்தம் கேட்டுள்ளது. திரும்பி பார்த்த போது மர்ம நபர் யாரோ , மொபைல் போனில் வீடியோ எடுப்பது தெரிந்துள்ளது.
உடனே அப்பெண் சத்தம் போடவே உறவினர்கள் குளியலறை ஜன்னல் அருகே சென்று பார்த்தனர். அப்போது மொபைல் போனில் வீடியோ எடுத்தது பக்கத்து வீட்டில் வசிக்கும் சொக்கலிங்கம் ( வயது 43 ) என்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க முயன்ற போது தகாத வார்த்தையில் திட்டி தப்பியுள்ளார். இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து சொக்கலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி , 62 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 45 ) கார் ஓட்டுநர். அவருக்கு அறிமுகமான சிலர் , காவல் துறையில் ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாயும் , அவருக்கு தெரிந்த 19 பேரிடம் இருந்து , 57 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளனர்.
பின் போலி ஆணை பணி கொடுத்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப் பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் , திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கபாலி ( வயது 53 ) அவரது மனைவி செல்வி ( வயது 45 ) மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்கள் துாத்துக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி ( வயது 45 ) என்பவர் எஸ்.ஐயாகவும் , அவர் மூலம் காவல் துறையில் வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்தது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி நியமன ஆணைகள், காவல் எஸ்.ஐ., சீருடையில் எடுக்கப்பட்ட போலி புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண்ணை ஆபாசமாக சித்தரித்து தொல்லை கொடுத்த நபர். ஜாமினில் வந்து மீண்டும் தொந்தரவு
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 42 வயது பெண் , கடந்த மே 28 - ம் தேதி மேற்கு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தூத்துக்குடி மாவட்டம் முனியசாமிபுரத்தைச் சேர்ந்த கோபி ( வயது 42 ) என்பவர் பேஸ்புக் மூலம் பழக்கமானார். அவரது தவறான நோக்கத்தை அறிந்து அவருடனான பழக்கத்தை நிறுத்திக் கொண்டேன்.
அவரது மொபைல் போன் எண்ணை பிளாக் செய்த பிறகும் , வேறு ஒரு எண்ணில் இருந்து என் உறவினர்களை தொடர்பு கொண்டு , அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
விசாரித்த போலீசார், கோபியை கடந்த மே 30 ம் தேதி கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த கோபி , மீண்டும் அப்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பழி வாங்கும் எண்ணத்துடன் , அப்பெண்ணின் பெயரில் பேஸ்புக் போலியாக பக்கம் துவக்கியுள்ளார். அதில் ஆபாசமான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
மேலும் தன்னை சிறைக்கு அனுப்பிய நீங்கள் , குடும்பத்துடன் வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் வாழவே விட மாட்டேன் என மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து செப்டம்பர் 23 - ம் தேதி மேற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் கோபியை மீண்டும் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





















