மேலும் அறிய

கலை கட்டிய மாமல்லபுரம்..! சுவாரசிய தகவல்..! நீங்களும் ஒரு விசிட் அடியுங்கள்..!

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவங்கியது. விழாவை தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமான செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் துவங்கி  ஜனவரி மாதம் வரை  நாட்டிய விழா நடத்தப்படுகிறது. மத்திய - மாநில அரசு சுற்றுலாத் துறைகள் இணைந்து நடத்தும் இந்த விழாவில், பரதம், கரகம், காவடி, ஒயிலாட்டம் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குச்சிப்புடி, கதகளி, பறைஇசை, ராஜஸ்தானி, ஒடிசி உள்ளிட்ட 60 கலைகள் அரங்கேற்றப்படும். இந்த ஆண்டு விழா நேற்று முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவணங்கள் அமைச்சர் அன்பரசன், ஆகியோர் இன்று குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கிவைத்தனர்.

கலை கட்டிய மாமல்லபுரம்..! சுவாரசிய தகவல்..! நீங்களும் ஒரு விசிட் அடியுங்கள்..!

முதல்நாள் முதல் நிகழ்ச்சியாக சென்னை அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரம் கச்சேரியும், இரண்டாம் நிகழ்ச்சியாக மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும் அதை தொடர்ந்து பிரியதர்ஷினி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சுற்றுலா துறை அரசு முதன்மை செயலாளர்  சந்திரமோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலாஜி, வரலட்சுமி, மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

இந்திய நாட்டிய திருவிழாவினை, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்  துவக்கி வைத்து  தெரிவித்தாவது,

பலதரப்பட்ட தனிச்சிறப்பு பெற்ற சுற்றுலா வளம் பொருந்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கிராமிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சுற்றுசூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, வணிக சுற்றுலா. கல்வி சுற்றுலா மற்றும் மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு ஒரு முழுமையான சுற்றுலா மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.  தமிழ்நாடு முதலமைச்சரின் சீரியதலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டிய விழா 

வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகமண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டில் கோடை விழா, மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, உதகமண்டலத்தில் தேயிலை சுற்றுலா விழா, போன்ற பல்வேறு விழாக்கள் சுற்றுலாப் பயணிகளை அதிக எண்ணிக்கையில், சுற்றுலா தலங்களுக்கு வருகை புரிவதற்கும் அவர்கள் தங்கும் காலத்தினை அதிகரிப்பதற்கும் நடத்தப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் கால முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகையாக சிற்பங்கள் இங்கு உள்ளன. இவைதவிர, சிற்பத் தொகுப்புகள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. மாமல்லபுரத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்திய நாட்டிய விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கலை கட்டிய மாமல்லபுரம்..! சுவாரசிய தகவல்..! நீங்களும் ஒரு விசிட் அடியுங்கள்..!

இன்று துவக்கி வைக்கப்பட்ட இந்திய நாட்டிய விழா 12.01.2023 வரை தினமும் தொடர்ந்து நடைபெறும். அதில் சிறந்த கலைஞர்களால் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், ஒடிசி மற்றும் கிராமிய நிகழ்ச்சியான கரகம், காவடி, தப்பாட்டம், தேவராட்டம் ஆகியவையும் இவ்விழாவில் இடம்பெறுகின்றன. தினந்தோறும் மூன்று குழுக்கள் வீதம் 21 நாட்கள் நடைபெறும் இந்திய நாட்டிய திருவிழாவில் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்த உள்ளார்கள்.

2.01 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

தமிழகத்திற்கு 2021 ஆம் ஆண்டில் 11.53 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2.01 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். 2021-ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவில் முதல் இடத்தையும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இரண்டாம் இடத்தையும் தமிழ்நாடு பெற்றது. 2021 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு 38,922 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஆனால் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களுக்கு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரியும் இடமாக அமைந்துள்ளது.

மாமல்லபுரத்தில்உள்ள அர்ஜீனா தபசில் 3D லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ரூ. 5.00 கோடியில் ஒளி-ஒலி காட்சி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதிகளை இணையதள பயண நிறுவனங்களில் (Online Travel Aggregators) இணையதளத்தில் இடம்பெற செய்து பிரபலப்படுத்தி, வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ. 1.50 கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget