மகா விஷ்ணு விவகாரம் - பள்ளி மேலாண்மை குழு எடுத்த அதிரடி முடிவு
மகா விஷ்ணு விவகாரம் குறித்து பள்ளி மேலாண்மை குழு சார்பில் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் - பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்திரகலா
சென்னை அசோக் நகர் மேல் நிலைப் பள்ளியிள் SMC உறுப்பினர் சார்பில் மகா விஷ்ணு வின் ஆன்மீக சொற் பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அந்த தகவல் உண்மைக்கு புரம்பானது என பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா அளித்த பேட்டியில் ;
கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் குழு தான் எஸ் எம் சி வேலை. கல்விக்கு எதிராகவும் மாணவர்களுக்கு எதிராகவும் எந்த செயலும் செய்ததில்லை.
சென்ற மாதம் 24 ஆம் தேதி கல்வி மேலாண்மை குழுவிற்கான மறுகட்டமைப்பு தேர்தல் நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தான் மகாவிஷ்ணு சொற்பொழிவை ஏற்படுத்திக்கொடுத்ததாக செய்தி வந்தது. அதை நாங்கள் ஏற்படுத்தி தரவில்லை. அந்த நிகழ்ச்சி நடந்த பற்றி தலைமை ஆசிரியரோ யாரோ எங்களுக்கு சொல்லவில்லை.பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று வரை கூட்டப்படவில்லை. இது போன்ற நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடக்கக் கூடாது இது தான் பள்ளி மேலாண்மை குழுவின் நிலைப்பாடு.
எங்களுடைய பணி என்பது இணையற்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதால் பள்ளி வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை நடந்தால் அதை தீர்த்து வைப்பது தான் பள்ளி மேலாண்மை குழுவின் வேலை
இது தொடர்பாக திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதாக தெரிவித்தார்.