சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்: பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்: பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.! Low Pressure Crosses Chennai Here's a Map of the Route Traveled and rain updates சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்: பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/15/68b6af91e1e5777b1097f55ffe9445a51729005736117572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று , வியாழன்று அதிகாலை 5.30 மணி அளவில் சென்னையை கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை காலை சுமார் 11 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலமானது நாளை மறுநாள் ( அக்.17 ) காலை 5.30 மணியளவில் சென்னை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
இந்த நிலையில் நாளை (16.10.2024 அன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள் இயங்கும்:
எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள். பால்வளத் துறை, குடிநீர் வழங்கல் துறை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை:
நாளை (16.10.2024) மிக அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Also Read: TN Rain News LIVE: சென்னை: பாஸ்போர்ட் அலுவலகம் இயங்காது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)